தற்போது அபுதாபியில் 10 ஓவர்கள் வடிவத்தில் டி10 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு போட்டியில் பங்களா டைகர் அணிக்காக விளையாடும் இங்கிலாந்தின் லியம் லிவிங்ஸ்டன் 15 பந்தில் அதிரடியாக அரைசதம் அடித்து தனது அணியை வெல்ல வைத்திருக்கிறார்.
கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் லியம் லிவிங்ஸ்டன் முக்கிய வீரராக இருந்து வந்தார். இந்த நிலையில் அவரை தற்போது நடந்து முடிந்திருக்கும் ஐபிஎல் மெகா ஏலத்தில் 8.50 கோடிக்கு சிஎஸ்கே அணி உடன் போட்டியிட்டு ஆர்சிபி அணி வாங்கியது. இந்தச் சம்பவம் நடந்த உடனேயே அவர் அதிரடியில் மிரட்டி இருக்கிறார்.
டெல்லி புல்சை கரை சேர்த்த நிகில் சவுத்ரி
இந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற பங்களா டைகர்ஸ் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. அந்த அணிக்கு மேல் வரிசையில் இருந்து மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த இங்கிலாந்தின் ஜேம்ஸ் வின்ஸ் மட்டுமே தாக்குப்பிடித்து விளையாடி 15 பந்தில் 27 ரன்கள் எடுத்தார்.
இதற்கு அடுத்து பேட்டிங் வரிசையில் எட்டாவது இடத்தில் வந்த நிகில் சவுத்ரி 16 பந்துகளை மட்டுமே சந்தித்து ஆட்டம் இழக்காமல் 7 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 43 ரன்கள் குவித்தார். பத்து ஓவர்களில் டெல்லி புல்ஸ் அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்தது. டேவிட் பைன் மற்றும் ஜோஸ் லிட்டில் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.
15 பந்தில் ருத்ர தாண்டவம்
இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி களம் இறங்கிய பங்களா டைகர்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் ஹசரத்துல்லா ஷஷாய் 20 பந்தில் 24 ரன்கள், முகமது சேஷாத் 6 பந்தில் 5 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதைத்தொடர்ந்து மூன்றாவது இடத்தில் வந்த இலங்கை முன்னாள் கேப்டன் டசன் சனகா அதிரடியாக 14 பந்தில் 33 ரன்கள் எடுத்தார்.
இதையும் படிங்க : நியூசி டெஸ்ட்.. இங்கிலாந்து பிளேயிங் XI அறிவிப்பு.. ஆர்சிபி வீரர் அறிமுகம்.. இந்திய அணிக்கு சாதகம் நடக்குமா?
இதைத்தொடர்ந்து பேட்டிங் வரிசையில் நான்காவதாக வந்த லியாம் லிவிங்ஸ்டன் ஆட்டம் இழக்காமல் வெறும் 15 பந்துகளை மட்டுமே சந்தித்து 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உடன் 333.33 ஸ்ட்ரைக் ரேட்டில் 50 ரன்கள் குவித்தார். இவரது அதிரடியால் 9.4 ஓவரில் இலக்கை எட்டி பங்களா டைகர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லிவிங்ஸ்டன் அதிரடி தற்போது ஆர்சிபி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.
.@liaml4893 take a bow 🤯⚡️
— T10 Global (@T10League) November 25, 2024
We have just witness something special at the Zayed Cricket Stadium Abu Dhabi 🔥
The fastest 5️⃣0️⃣ in the 2024 #AbuDhabiT10 coming off just 15 balls 😮💨#ADT10 #CricketsFastestFormat #InAbuDhabi pic.twitter.com/9qjpKCohT9






