சிஎஸ்கே அணியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குச் சென்று இருக்கும் ரவீந்திர ஜடேஜா தாக்கத்தை கொடுக்க முடியாது என முகமது கைஃப் தெரிவித்திருக்கிறார்.
கடந்த வாரத்தில் சிஎஸ்கே அணி நிர்வாகம் ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கொடுத்துவிட்டு, அந்த அணியில் இருந்து சஞ்சு சாம்சனை டிரேடிங் செய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஜடேஜா சிஎஸ்கே அணிக்கு கொடுத்த தாக்கத்தை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கொடுக்க முடியாது என முகமது கைஃப் தெரிவித்திருக்கிறார்.
காரணம் இதுதான்
இது குறித்து முகமது கைஃப் பேசும்பொழுது ” ஐபிஎல் தொடரில் பல காலமாக ரவீந்திர ஜடேஜா சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்தான் பந்து வீசி வருகிறார். அவருக்கு சேப்பாக்கம் மைதானத்தின் சிவப்பு மண் ஆடு களங்களில் எந்த பிரச்சனையும் இதுவரை ஏற்படவில்லை. இப்போது அவர் தெற்கே இருந்து வடக்கே வருகிறார். இங்கு அப்படியே நிலைமைகள் மாறுகிறது”
“ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சொந்த மைதானத்தில் ஆடுகளங்கள் கருப்பு மண் ஆடுகளங்கள் ஆகும். இங்கு சென்னை சேப்பாக்கத்தில் கிடைக்கும் பவுன்ஸ் மற்றும் ஷார்ப் டர்ன் இரண்டும் கிடைப்பது கடினமான விஷயமாகும். இதன் காரணமாகத்தான் ரவிச்சந்திரன் அஸ்வின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வந்த பொழுது சிரமப்பட்டார்”
ராஜஸ்தானின் பெரிய பிரச்சனை இதுதான்
“தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பெரிய பிரச்சனையாக பந்துவீச்சு யூனிட் இருந்து வருகிறது. அவர்களுக்கு கடந்த சீசனில் சரியான பந்துவீச்சாளர்கள் இல்லாதது தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. பேட்டிங்கை எடுத்துக் கொண்டால் சூரியவன்சி மற்றும் ஜெய்ஸ்வால் துவங்குவார்கள். மூன்றாவது இடத்தில் இந்த முறை துருவ் ஜுரலை விளம்பரப்படுத்துவார்கள்”
இதையும் படிங்க : கம்பீர் ஒரு விஷயத்தை கவனிச்சே ஆகணும்.. திரும்பிப் போய் வரலாற பார்த்தா தேவையில்லாதது தெரியும் – கங்குலி அறிவுரை
“இதற்கு அடுத்த இடங்களில் ரியான் பராக், ஜடேஜா, ஹெட்மாயர், சாம் கரன் வருவார்கள். வேகப்பந்து வீச்சுக்கு சந்திப் சர்மா, ஆர்ச்சர் மற்றும் பர்கர் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு நல்ல ஸ்பின்னர் இல்லை. தற்போது இதுதான் பிரச்சினையாக மாறி இருக்கிறது. எனவே அவர்கள் ஒரு ஸ்பின்னரை நோக்கி ஏலத்தில் ஓடுவார்கள்” என்று கூறி இருக்கிறார்.






