கம்பீர் ஒரு விஷயத்தை கவனிச்சே ஆகணும்.. திரும்பிப் போய் வரலாற பார்த்தா தேவையில்லாதது தெரியும் – கங்குலி அறிவுரை

0
19
Gambhir

இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட் க்கு ஒரு பிளேயிங் லெவனை எப்படி அமைக்க வேண்டும் என்பது குறித்து கம்பீருக்கு சௌரவ் கங்குலி அறிவுரை கூறியிருக்கிறார்.

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் மொத்தம் நான்கு ஸ்பின்னர்கள் விளையாடினார்கள். இதில் வாஷிங்டன் சுந்தர் பந்து வீசுவதற்கான அவசியமே ஏற்படவில்லை. மேலும் இந்த போட்டியில் ஒரு சிறப்பு பேட்ஸ்மேன் விளையாடாதது இந்திய அணி தோல்வி அடைவதற்கு முக்கிய காரணமாகவும் இருந்தது.

- Advertisement -

இந்திய மண்ணில் டெஸ்ட் வரலாறு

இந்தியாவில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளுக்கு ஆரம்பத்தில் முதல் மூன்று நாட்கள் பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளம் கொடுக்கப்படும். அதே ஆடுகளம் கடைசி இரண்டு நாட்களில் உடைந்து சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக மாறும். இதன் காரணமாக போட்டி ஐந்து நாட்களுக்கும் நடைபெறும். இறுதிக்கட்டத்தில் விறுவிறுப்பாகவும் மாறும். 2001ஆம் ஆண்டு கங்குலி தலைமையில் ஆஸ்திரேலியாவை இந்தியாவில் வீழ்த்தும் பொழுதும் இதே போல் தான் ஆடுகளம் இருந்தது. மேலும் அணியில் நான்கு ஸ்பின்னர்களை வைத்துக் கொள்ளவில்லை.

இது குறித்து சௌரவ் கங்குலி பேசும் பொழுது “கம்பீருக்கு இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நான்கு ஸ்பின்னர்கள் தேவை கிடையாது. ஒரு முழு டெஸ்ட் போட்டியிலும் வாஷிங்டன் சுந்தர் ஒரே ஒரு ஓவர் மட்டுமே பந்து வீசி இருந்தார். உங்களுக்கு பந்து நன்றாக திரும்பக்கூடிய ஆடுகளத்தில் ஒரு ஸ்பின்னர் 20 முதல் 30 ஓவர்கள் வீச முடியும்போது, உங்களுக்கு நான்கு ஸ்பின்னர்கள் தேவை கிடையாது. இதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்”

- Advertisement -

மூன்றாவது இடத்தின் முக்கியத்துவம்

“வாஷிங்டன் சுந்தருக்கு இது மிகவும் நல்ல நேரம். அவர் ஒரு நல்ல கிரிக்கெட்டர். அவர் நன்றாக பந்து வீசுகிறார்; நன்றாக பேட்டிங் செய்கிறார். அதே சமயத்தில் இந்திய அணிக்கு மூன்றாவது இடத்தில் தொடர்ந்து நிலையாக அவரே பேட்டிங் செய்வாரா? என்று எனக்குத் தெரியவில்லை”

இதையும் படிங்க : நீங்க யார வேணா ட்ரோல் பண்ணுவீங்களா.. கம்பீர் யார் தெரியுமா?.. இதெல்லாம் மோசமானது – ராபின் உத்தப்பா விமர்சனம்

“ஒவ்வொரு டெஸ்ட் அணிக்கும் மூன்றாவது இடம் என்பது மிகவும் முக்கியமானது. மேலும் ஐந்தாவது இடம் வரையில் அந்தந்த இடங்களுக்கான ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன்கள் விளையாட வேண்டும். நீங்கள் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு செல்லும் பொழுது, அங்கு மூன்றாவது இடத்தின் முக்கியத்துவம் மிகவும் அதிகம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -