இந்திய அணி இந்தியாவை விட்டு போயிடுங்க.. அப்பதான் அந்த முக்கியமானது நடக்கும் – ஸ்ரீகாந்த் விமர்சனம்

0
52
Srikanth

தற்போது இந்திய டெஸ்ட் அணி மோசமாகச் செயல்பட்டு வரும் நிலையில் இந்திய முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கேலியாக விமர்சனம் செய்திருக்கிறார்.

இந்திய டெஸ்ட் அணி உள்நாட்டில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. அதே சமயத்தில் இறுதியாக இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இரண்டுக்கு இரண்டு என சமன் செய்து வந்தது. பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக உள்நாட்டில் வென்று, தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிராக தோல்வி அடைந்திருக்கிறது.

- Advertisement -

இந்திய அணியின் பிரச்சனை

இந்திய அணி வேகப்பந்து வீச்சுக்கு எதிராக ஓரளவுக்கு தாக்குப்பிடித்து விளையாடுகிறது. அதுவும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்களில் இந்திய அணி தடுமாறவே செய்கிறது. சுழல் பந்துவீச்சுக்கு ஓரளவுக்கு சாதகம் இருந்தாலே இந்திய அணி மோசமாக சுருண்டு விடுகிறது.

இப்போதைக்கு இந்திய அணி பேட்டிங் செய்வதற்கு சாதகமான தட்டையான ஆடுகளங்களில் மட்டுமே ஓரளவுக்கு நல்ல முறையில் பேட்டிங் செய்கிறது. இதன் காரணமாக இந்திய அணியால் உள்நாட்டில் சிறப்பாக விளையாட முடியாத அதிர்ச்சியான சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இதுவரை இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த அணிக்கும் இந்த பிரச்சனை வந்ததில்லை.

- Advertisement -

ஸ்ரீகாந்த் கேலியான விமர்சனம்

இந்த நிலையில் இந்திய அணி வெளிநாட்டில் மட்டுமே ஓரளவுக்கு சிறப்பாக செயல்படுவதால் மொத்த போட்டிகளையும் வெளிநாட்டில் வைத்துக் கொள்ளலாம் என கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இந்திய அணியை விமர்சனம் செய்திருக்கிறார்.

இதையும் படிங்க : கம்பீரை குறை சொல்ற உங்களுக்கு மனசாட்சி இல்லையா.. நீங்க அப்ப இத செஞ்சீங்களா? – கவாஸ்கர் கோபம்

இதுகுறித்து அவர் பேசும் பொழுது “இந்திய அணி வெற்றி பெறுவதற்கு என்னிடம் ஒரு நல்ல யோசனை இருக்கிறது. அவர்கள் விளையாடும் எல்லா போட்டிகளையும் இந்தியா தாண்டி வெளியில் நடத்தலாம். கடைசியில் அவர்கள் இங்கிலாந்தில் நல்ல முறையில் விளையாடினார்கள். எனவே இங்கிலாந்தில் எல்லா போட்டிகளையும் நடத்தினால் நன்றாக இருக்கும். மேலும் இங்கிலாந்தில் நிறைய இந்திய ரசிகர்கள் இருப்பதால் கூட்டமும் கூடும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -