ஸ்ரேயாஸ் அமைதியா மட்டும் இருங்க.. உங்களுக்காக அந்த விஷயம் காத்துகிட்டு இருக்கு – முகமது கைஃப் பேச்சு

0
21
Shreyas

இந்திய அணி வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது பொறுமையாக இருப்பது போலவே இருக்க வேண்டும் என முகமது கைப் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் நடைபெற்ற முடிந்த ஆசியக் கோப்பை டி20 தொடரில் இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் வாரியம் அவரை ஒதுக்குவதாக ரசிகர்கள் குற்றம் சாட்டி வந்தார்கள்.

- Advertisement -

ஸ்ரேயாஸ் ஐயர் கோரிக்கை

ஸ்ரேயாஸ் ஐயருக்கு முதுகு பகுதியில் காயம் இருந்து வருகின்ற காரணத்தினால், உள்நாட்டு மற்றும் இந்திய சிவப்பு பந்து அணியில் சில காலத்திற்கு தேர்வு செய்ய வேண்டாம் என ஸ்ரேயாஸ் ஐயர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் வாரியம் அவருடைய கோரிக்கையை ஏற்றுக் கொண்டிருக்கிறது. அதே சமயத்தில் இந்திய வெள்ளை பந்து அணிகளில் விளையாடுவதற்கு தான் தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இதன் அடிப்படையில் அவரை இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழு தேர்வு செய்கிறது.

- Advertisement -

மீண்டும் வாய்ப்பு வரும்

மேலும் ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்பட்டதோடு துணை கேப்டன் ஆகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் அவருக்கு ஆஸ்திரேலியா டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.

இதையும் படிங்க : ரோகித் ரொம்ப மனக்கயத்தோட இருக்கறாரு.. 2011ல இதே மாதிரி இருந்தப்ப அதை செஞ்சார் – சஞ்சய் பாங்கர் பேட்டி

இதுகுறித்து முகமது கைப் கூறும் போது “ஸ்ரேயாஸ் ஐயரை பற்றி பேசுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவருடைய டெஸ்ட் அறிமுகத்திலேயே அவர் சதம் அடித்தார். 2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை மிடில் வரிசையில் கதாநாயகனாக இருந்தார். ஐபிஎல் தொடரில் மூன்று அணிகளை அழைத்துச் சென்ற ஒரே கேப்டனாக இருக்கிறார். உங்களுக்கு இந்திய டி20 அணியிலும் அழைப்பு வரும். நீங்கள் அமைதியாக மட்டும் காத்திருங்கள். உங்களுக்காக சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -