மும்பை இந்தியன்ஸ் அணியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரோஹித் சர்மாவுக்கு என்ன செய்தார்களோ அதை ஹர்திக் பாண்டியாவுக்கு செய்யக்கூடாது என முகமது கைப் கூறியிருக்கிறார்.
ஐபிஎல் வரலாற்றில் முதல் ஐந்து ஐபிஎல் கோப்பைகளை குறைந்த தொடர்களில் வென்ற கேப்டனாக ரோகித் சர்மா இருக்கிறார். ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பாக அவரை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டது.
வினோத விஷயம்
இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றது. ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அவரால் கேப்டனாக இருக்க முடியவில்லை.
இந்த நிலையில் தற்போது சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பை தொடரை வென்றது. ஆனால் இவராலும் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஆக முடியவில்லை. டி20 உலக கோப்பையை வென்ற இந்திய கேப்டன்கள் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்தாலும் கேப்டன் பொறுப்பை ஏற்க முடியாத வினோத சூழ்நிலை நிலவி வருகிறது.
இதைச் செய்ய வேண்டாம்
இதுகுறித்து முகமது கைப் பேசும்பொழுது ” இரண்டு வருடங்களுக்கு முன்பு ரோஹித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கினார்கள். தற்போது வந்த ஹர்திக் பாண்டியா இரண்டு வருடங்களாக அந்த பொறுப்பில் பழகிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ரோஹித் சர்மாவுக்கு செய்ததை ஹர்திக் பாண்டியாவுக்கு செய்ய வேண்டாம்”
இதையும் படிங்க: அஸ்வின் நீ பெரிய ஆளா.. அர்ஜுன் டெண்டுல்கர் பத்தி அப்படி சொல்லலாமா?.. உளராமல் இரு – யோக்ராஜ் சிங் பேட்டி
” சூரியகுமார் யாதவ் ஒரு ஆப்ஷனாக கேப்டன் பொறுப்புக்கு இருக்கிறார். அன்று குஜராத் அணிக்கு ஐபிஎல் கோப்பையை கேப்டனாக ஹர்திக் பாண்டியா வென்றதால் அவரை மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஆக்கினீர்கள். தற்போது சூரியகுமார் யாதவ் இந்திய அணிக்கு டி20 உலக கோப்பையை வென்றதால் கேப்டன் ஆக்குவீர்களா? நாளை வேறு யாராவது இதை செய்தால் நீங்கள் சூரிய குமாரையும் நீக்கி விடுவீர்களா?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.






