இங்கிலாந்து கிரிக்கெட்ல ஒரே நல்ல விஷயம் அவர் மட்டும்தான்.. அவர மாதிரி விளையாடுங்க – முகமது கைஃப் அறிவுரை

0
84

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி மூன்று போட்டிகளிலும் மோசமாக தோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறிகிறது.

சூழ்நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் இங்கிலாந்து அணியின் அணுகுமுறை குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் அணி சில ஆண்டுகளாகவே பாஸ் பால் எனப்படும் அதிரடியாக விளையாடும் ஆட்ட முறையை அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் பின்பற்றி வருகிறது. டெஸ்ட் வடிவ கிரிக்கெட்டில் அந்த அணி அதிரடியாக விளையாடும் ஆட்ட பாணியை பின்பற்ற அதற்கு கை மேல் பலனும் கிடைத்தது. அதிரடியாக வெற்றிகளை குவிக்க ஆரம்பித்தது. டி20 வடிவத்திலும் இதே ஃபார்மேட் முறையை பின்பற்றி வரும் இங்கிலாந்து அணி ஒருநாள் வடிவத்திலும் இதே முறையை செயல்படுத்த ஆனால் இது அவர்களுக்கு கைகொடுக்கவில்லை.

விளைவாக கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பையில் மோசமாக வெளியேறிய இங்கிலாந்து அணி, தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் மூன்று போட்டிகளிலும் தொடர்ச்சியாக தோல்வி அடைந்து மோசமான முறையில் வெளியேறி இருக்கிறது. இந்த அணியில் ஜோ ரூட் மட்டுமே சூழ்நிலைக்கு ஏற்ப தனது ஆட்ட முறையை மாற்றி நன்றாக விளையாடி வருகிறார். இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் இங்கிலாந்து அணி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இங்கிலாந்து அணி தொடரில் ஆரம்பத்திலேயே வெளியேறி இருப்பது ‘ஒரு நாடு ஒரே பாணி முறை’ வேலை செய்யாது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது. நீங்கள் பாஸ் பாலை கண்மூடித்தனமாக அனைத்து வடிவங்களிலும் பின்பற்ற முடியாது. வெற்றிகரமான அணிகள் சூழ்நிலைக்கு தகுந்தவாறு தங்களை மாற்றிக் கொள்வதன் மூலமாகத்தான் வெற்றி பெறுகின்றன. எனவே இங்கிலாந்து அணி பாஸ் பாலை பின்பற்றாமல் ஜோ ரூட்டின் ஆட்ட முறையை பின்பற்ற வேண்டும், எனவே இங்கிலாந்து அணி தனது ஆட்ட முறையை மாற்ற வேண்டியது கட்டாயம்” என்று முகமது கைப் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:டி20 WC வெச்சு பாத்தா.. இந்தியாவுக்கு இப்போ.. ஆஸி அணியைதான் புடிக்கும்.. இதான் காரணம் – கவாஸ்கர் கருத்து

இந்தத் தொடரை பொருத்தவரை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 351 ரன்கள் குவித்த இங்கிலாந்து அணி மோசமான பந்து வீச்சு காரணமாக தோல்வியடைந்தது. அதற்குப் பிறகு ஆப்கானிஸ்தான் அணியிடம் 8 ரன்கள் வித்தியாசத்திலும், அதற்கு பின்னர் தென்ஆப்பிரிக்க அணியிடம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. தொடர் தோல்வியால் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் தனது கேப்டன் பதவியை விட்டு வெளியேறி இருக்கிறார் என்றும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -