அடுத்து நடைபெற இருக்கும் ஐபிஎல் மினி ஏலத்தில் குறிப்பிட்ட ஒரு வீரரை சிஎஸ்கே அணி வாங்க வேண்டும் என முகமது கைப் வேண்டுகோள் வைத்து இருக்கிறார்.
தற்போது பத்து ஐபிஎல் அணிகளும் தாங்கள் விடுவிக்க இருக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டு விட்டன. இதற்கு அடுத்து ஐபிஎல் மினி ஏலம் டிசம்பர் மாதம் மத்தியில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறந்த வீரர்கள் குறைந்த அளவே ஏலத்திற்கு வருவார்கள் என்பதால் அணிகளிடையே கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வீரரை வாங்க வேண்டும்
இந்த நிலையில் நடைபெற இருக்கும் ஐபிஎல் மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி எந்த வீரர்களை வாங்கினால் அவர்களுடைய பௌலிங் யூனிட் வலிமையாக மாறும் என்பது முகமது கைப் அறிவுரை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து முகமது கைப் கூறும் பொழுது “இந்த ஐபிஎல் மினி ஏலத்தில் ஆகாஷ் மதுவாலை சிஎஸ்கே குறிவைக்க வேண்டும். சிஎஸ்கே ஆடுகளங்கள் நன்கு வறட்சியாக காணப்படும். இதன் காரணமாக இறுதி கட்ட ஓவர்களில் அவருக்கு நல்ல ரிவர்ஸ் ஸ்விங் கிடைக்கும். தற்போது அவர்களது அணியில் தேஸ் பாண்டே, தீபக் சகர் போன்றவர்கள் இல்லை. மேலும் அவர்களுக்கு ஒரு சுழல் பந்துவீச்சாளர் தேவையாக இருக்கலாம். எனவே அவர்கள் ரவி பிஸ்னாயை வாங்கலாம்”
முக்கிய பவுலராக இருப்பார்
“சிஎஸ்கே அணியின் முக்கிய பௌலராக நாதன் எல்லீஸ் களம் இறங்குவார். பந்துவீச்சை ஆரம்பிக்கக் கூடியவர்களாக கலீல் அகமத் மற்றும் அன்சூல் காம்போஜ் இருவரும் இருப்பார்கள். நாதன் எல்லீஸ் ஆட்டத்தையே மாற்றக்கூடிய பந்துவீச்சை செய்வார்கள் என்று நான் நம்புகிறேன். அவர் சிஎஸ்கே அணியின் முக்கிய பந்துவீச்சாளராக மாறப் போகிறார்”
இதையும் படிங்க : எங்க ஆள கம்பீர் சேர்த்துக்கணும்.. இந்த 3 பிளேயரை நம்பினாதான் ஜெயிக்க முடியும் – கங்குலி அறிவுரை
“தற்போது நாதன் எல்லீஸ் தன்னுடைய பௌலிங் பார்மை கண்டுபிடித்து விட்டார். அவர் 140 முதல் 145 கிலோமீட்டர் வேகத்தில் இனி பவுன்சர்கள் வீசுவார். மெதுவான பந்து மற்றும் யார்க்கர் அவரிடம் இருக்கிறது. தற்போது அவர்களுக்கு டாப் ஆர்டரில் விளையாட சிறந்த வீரராக சஞ்சு சாம்சன் கிடைத்திருக்கிறார். இவர்களெல்லாம் சிஎஸ்கே அணிக்கு பெரிய பலமாக மாறப் போகிறார்கள்” என்று கூறி இருக்கிறார்.






