கெயிலை விட சிறந்த அதிரடி பேட்ஸ்மேன் அபிஷேக்தான்.. ஆர்சிபில நேரடியா பார்த்தேன் – முகமது கைஃப் பேச்சு

0
25
Abhishek

சர்வதேச கிரிக்கெட்டில் யுனிவர்சல் பாஸ் என அழைக்கப்படும் அதிரடி ஆட்டக்காரர் கெயிலை விட இந்திய டி20 அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா தான் அதிரடியானவர் என முகமது கைப் கூறியிருக்கிறார்.

நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் மொத்தம் 6 போட்டிகளில் அபிஷேக் சர்மா கிட்டத்தட்ட 200 ஸ்ட்ரைக் ரேட்டில் தொடர்ந்து மூன்று அரை சதங்கள் உடன் 309 ரன்கள் குவித்திருக்கிறார். மேலும் டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் ஐசிசி தரவரிசையில் அபிஷேக் சர்மா தான் முதலிடத்தில் இருக்கிறார்.

- Advertisement -

கெயிலை விட சிறப்பானவர்

மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து ஏழு முறை 30 ரன்னுக்கும் அதிகமாக எடுத்திருக்கிறார். இன்றைய இறுதிப் போட்டியிலும் 30 ரன் தாண்டி எடுத்தால், அதிக முறை 30 ரன்கள் தாண்டி தொடர்ந்து எடுத்த பேட்ஸ்மேன் என்ற உலகச் சாதனையை படைப்பார்.

இது குறித்து முகமது கைப் கூறும் பொழுது “கெயிலுக்கு சமமாக அதிரடியாக அபிஷேக் ஷர்மா விளையாடுகிறார் என்பதைவிட அவரைவிட சிறப்பாக விளையாடுகிறார் என்று சொல்ல வேண்டும். பந்து கொஞ்சம் நகர்ந்தாலோ அல்லது சுழன்றாலோ கெயில் கொஞ்சம் பொறுமையாக இருப்பார். அந்த நேரத்தில் ஒரு பவுலரை குறி வைத்து அவரிடம் ஒரே ஓவரில் 5 சிக்ஸர் கூட அடிப்பார். ஒரு மெய்டன் ஓவர் கூட விளையாடுவார்”

- Advertisement -

அபிஷேக் வேற மாதிரி

“அதே சமயத்தில் அபிஷேக் சர்மா ஷாஹீன் அப்ரீடியை முதல் பந்திலேயே சிக்ஸர் அடிக்கிறார். அவர் சிறந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக மிரட்டலாக இருக்கிறார். ஆனால் நான் ஆர்சிபி அணியில் கெயிலை பார்த்திருக்கிறேன். அவர் புத்திசாலித்தனமாக பேட்டிங் செய்வார். சிறந்த பவுலர்களுக்கு மரியாதை கொடுப்பார். ஆனால் அபிஷேக் ஷர்மா இந்த மாதிரி மரியாதை கொடுப்பதில்லை”

இதையும் படிங்க: சூர்யா பேட்டிங் பத்தி குறை சொல்றவங்க.. உள்ள வந்து இந்த 2 விஷயத்தை பாருங்க.. மாஸ் பண்றார் – அஸ்வின் பேச்சு

“கில் ஆரம்பத்தில் அபிஷேக் ஷர்மா போல விளையாட நினைத்து ஆட்டம் இழந்தார். பிறகு தன்னுடைய வழக்கமான பாணியில் விளையாடிய ரன் எடுத்தார். ஆனால் அவர் மீண்டும் அபிஷேக் ஷர்மா போல அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாட முயற்சி செய்கிறார். கிளாஸ் பிளேயரான அவருடைய திறமை தற்பொழுது இதனால் காணாமல் போயிருக்கிறது. அவர் அவரைப் போலவே தொடர்ந்து விளையாட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -