இந்திய அணி வீரர் வாஷிங்டன் சுந்தர் ரவிச்சந்திரன் அஸ்வினின் திறமையில் பாதி கூட கிடையாது முகமது கைஃப் கூறியிருக்கிறார்.
தற்போது தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வாஷிங்டன் சுந்தர் பேட்ஸ்மேன்னா இல்லை பவுலர் என்பதில் குழப்பம் இருந்து வருகிறது. எனவே அவரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து முகமது கைஃப் பேசி இருக்கிறார்.
இது குறித்து முகமது கைஃப் கூறும் பொழுது “வாஷிங்டன் சுந்தரின் ரோல் என்ன என்பது இந்திய அணி நிர்வாகத்தால் மட்டுமே சொல்ல முடியும். அவர் ஒரு சுழல் பந்துவீச்சாளர் என்றால், அவர் ரவிச்சந்திரன் அஸ்வினின் திறமையில் பாதி கூட இல்லாதவர். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில், வெவ்வேறு கேப்டன்களின் கீழ் அவர் பெரிதாக பந்து வீசவைக்கப்படுவது கிடையாது”
“போட்டி கொஞ்சம் இறுக்கமாக இருக்கும் பொழுது கேப்டன்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்திப் யாதவ் இருவரிடம் தான் செல்கிறார்கள். இவர்களைப் போல எந்த கட்டத்திலும் வாஷிங்டன் சுந்தரால் விக்கெட் வீழ்த்த முடியும் என அவர்கள் நம்புவது கிடையாது. எனவே அவர் தனது பந்துவீச்சில் நிறைய உழைக்க வேண்டியது இருக்கிறது”
“முதலில் வாஷிங்டன் சுந்தரின் பந்துவீச்சுத் திறன் குறைவாக இருக்கிறது. இப்போது நீங்கள் அவரை பேட்டிங் செய்ய சொல்லி அழுத்தத்தை கொடுக்கிறீர்கள். இப்போது அவர் பேட்ஸ்மேனா இல்லை பவுலரா என்பதில் பெரிய சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. அவருக்கு ஏதாவது ஒரு ரோலை கொடுங்கள். அவரால் அக்சர் செய்த ரோலை செய்ய முடியும்”
இதையும் படிங்க: தவறை திருத்திக்கொண்ட கம்பீர்.. தெஆ 2 வீரர்களை இழந்தது.. சோகமான சாதனை முடிவுக்கு வந்தது – தொடரை வெல்வோமா?
“ஆனால் அவர் முக்கிய பங்களிப்பு பந்துவீச்சில்தான் இருக்கிறது. அவர் பேட்டிங் செய்வது என்பது ஒரு போனஸ். அவரது பந்துவீச்சு சரி இல்லாமல் போய்விட்டால், அவர் மிகவும் பின்தங்கி விடுவார். எனவே அவரை முதலில் ஒரு பந்துவீச்சாளராக பார்க்க வேண்டும். பிறகு அவரிடம் பேட்டிங் கிடைத்தால் அதை எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.