நடப்பு ஐபிஎல் தொடரில் மே 18ஆம் தேதி மிகவும் முக்கியமான போட்டியில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன. இந்த போட்டியில் வெல்லும் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறக்கூடிய நிலையில் இருக்கிறது. தற்பொழுது இந்த போதலில் சிஎஸ்கே அணிதான் வெல்லும் என முகமது கைஃப் கூறியிருக்கிறார்.
சிஎஸ்கே அணி ஆர்சிபி அணியை விட ரன் ரேட்டில் கொஞ்சம் மேலே இருக்கின்ற காரணத்தினால், ஆர்சிபி அணி 18 ரன்கள் வித்தியாசத்திலோ அல்லது 11 பந்துகள் மீதம் வைத்தோ சிஎஸ்கே அணியை வெல்ல வேண்டும். அதே சமயத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றால் மட்டும் போதுமானது.
சிஎஸ்கே அணி சில தோல்விகளுக்கு பிறகு கடைசியாக சொந்த மைதானத்தில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக வெற்றி பெற்று மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறது. அது அணியின் பவுலிங் யூனிட்டில் முக்கிய வீரர்கள் இல்லையென்றாலும் கூட, வாய்ப்பைப் பெற்று விளையாட கூடியவர்கள் அணிக்கு நம்பிக்கை தருகிறார்கள்.
இந்த வகையில் ஆர்சிபி அணியை எடுத்துக் கொண்டால் அவர்கள் எல்லோரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக தொடர்ந்து ஐந்து போட்டிகளை வென்று தற்போது பிளே ஆப் வாய்ப்பையும் தக்க வைத்து நிற்கிறார்கள். அவர்கள் தற்பொழுது ஒரு அணியாக இணைந்து விளையாட ஆரம்பித்து இருப்பது பலமாக இருக்கிறது.
இந்த நிலையில் முகமது கைப் இந்த போட்டி குறித்து பேசும் பொழுது “சிஎஸ்கே பெரிய போட்டிகளுக்கான அணியாகும், அவர்களுக்கு எப்படி வெற்றி பெறுவது என்று தெரியும்.கடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் இரண்டு பந்துகள் மீதம் இருக்கும் பொழுது தோல்வியின் விளிம்பில் இருந்தார்கள். ஆனால் ஜடேஜா ஒரு சிக்சர், பவுண்டரி அடித்து வெற்றி பெற வைத்தார். ஆனால் இந்த முறை தோனியே பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார். டூ ஆர் டை கேமில் அவருடன் சேர்ந்து விளையாடக் கூடியவர்களும் சிறப்பாக விளையாடுவார்கள்.
இதையும் படிங்க : ஹைதராபாத் இந்த வேலையை செய்யாதுனு நம்பறேன்.. ஆனா ராஜஸ்தான் இதை செய்தே ஆகனும் – பிரையன் லாரா பேட்டி
முக்கியமான போட்டிகளில் தோனியின் பார்முலா என்னவென்றால், பீதி அடைய வேண்டாம் மூச்சு விடுங்கள் என்பதுதான். அவருக்கு மட்டுமே இந்த கலை இருக்கிறது. ஐபிஎல்லில் பல கேப்டன்கள் வந்தாலும் போனாலும் யாரிடமும் இது இல்லை. தோனி எப்பொழுதும் குறைவான தவறுகளை செய்யக்கூடியவர். அதனால்தான்அவர் சாம்பியன். சிஎஸ்கே ஆர்சிபி அணியை வெல்லும்” என்று கூறியிருக்கிறார்.