ரோகித் இது உலககோப்பை.. ஐபிஎல் கிடையாது.. இத செய்யலனா கஷ்டப்படுவிங்க – கைஃப் அட்வைஸ்

0
241
Kaif

நேற்று இந்திய அணி பங்களாதேஷ் அணிக்கு எதிராக டி20 உலகக்கோப்பை தொடரின் பயிற்சி போட்டியில் நியூயார்க் நாசாவ் கவுண்டி சர்வதேச மைதானத்தில் விளையாடியது. இந்த போட்டியில் இந்திய அணி மிக எளிதாக 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனாலும் முகமது கைப் இந்திய அணிக்கு முக்கியமான எச்சரிக்கை ஒன்றை செய்திருக்கிறார்.

நேற்று போட்டி நடைபெற்ற நியூயார்க் மைதானம் புதிதாக கட்டப்பட்டுள்ள மைதானம் ஆகும். மேலும் இந்த மைதானத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஆடுகளம், ஆஸ்திரேலியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட மண்ணில் செய்யப்பட்டது. மேலும் ஆடுகளம் மைதானத்திற்கு வெளியில் வைத்து தயாரிக்கப்பட்டு, உள்ளே கொண்டு வந்து செட் செய்யப்படும் டிராப் இன் ஆடுகளம் ஆகும்.

- Advertisement -

நேற்று மைதான கண்டிஷன் பந்து ஸ்விங் ஆவதற்கு வசதியாக இருந்தது. அதே சமயத்தில் பந்து கொஞ்சம் நின்றும் பவுன்ஸ் ஆகியும் வந்தது. மேலும் மைதானம் பெரியதாகவும் இருந்தது. இதன் காரணமாக பேட்டிங் செய்வது குறிப்பிட்ட இந்த மைதானத்தில் சவாலான ஒரு விஷயமாக அமைந்தது.

இதை சமாளித்து விளையாட முடியாத காரணத்தினால் எடுத்ததுமே சஞ்சு சாம்சன் நேற்று ஆட்டம் இழந்து வெளியேறிவிட்டார். ரிஷப் பண்ட்டை வழி நடத்திய ரோஹித் சர்மாவும் திடீரென ஆட்டம் இழந்துவிட்டார். அதிரடியாக விளையாடக்கூடிய சூரியகுமார் யாதவால் நினைத்தது போல் வேகமாக விளையாட முடியவில்லை.

நேற்றைய போட்டியில் இந்திய அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக ரிஷப் பண்ட் 32 பந்தில் 53 ரன் எடுத்தார். மேலும் கடைசி கட்டத்தில் வந்த ஹர்திக் பாண்டியா பழைய முறையில் நான்கு சிக்ஸர்களுடன் 40 ரன்கள் எடுத்தார். ஆனால் ஒட்டுமொத்தமாக பார்க்கும் பொழுது சரளமாக இந்திய அணி விளையாடியதாக தெரியவில்லை.

- Advertisement -

இதையும் படிங்க : 58 பந்து 131 ரன்.. 10 சிக்ஸர்.. ஜோன்ஸ் அதிரடி.. அமெரிக்கா அணி கனடாவை வென்றது.. டி20 உலககோப்பை

இதுகுறித்து முகமது கைப் கூறும் பொழுது ” நியூயார்க் மைதானத்தின் ஆடுகளம் நேற்று இருந்தது போலவே இருந்தால் பேட்டிங் செய்வதற்கு கடினமான ஒன்றாக இருக்கும். ஆடுகளம் மெதுவாகவும் அதே சமயத்தில் ஸ்பாஞ்ச் பவுன்ஸ் உடனும் இருக்கிறது. மேலும் பந்தில் நகர்வும், மைதானம் பெரியதாகவும் இருக்கிறது. இங்கு நல்ல பேட்டிங் டெக்னிக் இருக்கும் பேட்ஸ்மேன்கள் மட்டுமே ரன்கள் எடுக்க முடியும். நிச்சயமாக இது ஐபிஎல் கிடையாது” என்று கூறியிருக்கிறார்.