இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே அடுத்த நடைபெற இருக்கும் ஒருநாள் தொடருக்கு காயமடைந்திருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் இடத்திற்கு யாரை தேர்வு செய்ய வேண்டும்? என்பது குறித்து முகமது கைப் கூறியிருக்கிறார்.
இந்தியா தென் ஆப்பிரிக்க மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் டெஸ்ட் தொடருக்கு பிறகு விளையாட இருக்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் காயமடைந்த ஸ்ரேயாஸ் ஐயர் தென் ஆப்பிரிக்க ஒருநாள் தொடரில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ருதுராஜ் மற்றும் ஜெய்ஸ்வால் போட்டி
தற்போது தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் ருதுராஜ் முதல் இரண்டு போட்டிகளில் சதம் மற்றும் அரை சதம் அடித்து சிறந்த பார்மில் இருக்கிறார். மேலும் அவர் ரஞ்சி டிராபி தொடரிலும் மகாராஷ்டிரா அணிக்கு சிறப்பாக விளையாடி இருந்தார்.
இதற்கு அடுத்து ஜெய்ஸ்வால் ஒருநாள் அணியில் இடம் பெற வேண்டும் என வெளியில் இருந்து எப்போதோ குரல்கள் கேட்க ஆரம்பித்துவிட்டது. இதன் காரணமாக அவரை தேர்வு செய்து துவக்க வீரராக விளையாட வைத்து, கேப்டன் கில் மற்றும் விராட் கோலி இருவரையும் மூன்று மற்றும் நான்காவது இடத்தில் விளையாட வைக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
யாரை தேர்வு செய்ய வேண்டும்?
இதுகுறித்து முகமது கைப் பேசும் பொழுது “இதற்கு முன்பான ஆஸ்திரேலிய ஒரு நாள் அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கான மாற்று வீரராக யார் இருந்தாரோ அவர்தான் இடம் பெற வேண்டும். அவரது வாய்ப்பை ஏன் இன்னொருவர் திருட வேண்டும். அந்த இடத்திற்கு ஏற்கனவே துருவ் ஜுரல் இருந்தார். எனவே அவரே தொடர்ந்து இருக்கட்டும். அவருக்கு நான்காவது இடத்தில் விளையாடுவதற்கு நல்ல பேட்டிங் தொழில்நுட்பம் இருக்கிறது. மேலும் அவர் நல்ல பார்மில், விளையாடுவதற்கு தயாராக இருக்கிறார்”
இதையும் படிங்க: 460 ரன்.. தனியாளாய் நின்று போராடி.. தமிழ்நாட்டு அணியை கதறவிட்ட ரிங்கு சிங்.. 5 ரன் முன்னிலையில் அசத்தல்
“பயிற்சியாளர்கள் வீரர்களை உருவாக்க வேண்டும். புதிதாக வீரர்களை அழைத்து வந்து விளையாடி பின்பு அவர்களை கைவிடுவதை விட, ஏற்கனவே அணியில் வைத்திருக்கும் வீரருக்கு வாய்ப்பு கொடுத்து அவரை உருவாக்குவது சரியாக இருக்கும். வீரர்களை நாம் அணிக்குள் தொடர்ந்து சுழற்சி முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






