இன்று முதல் இந்திய அணி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இதற்காக தற்போது இந்திய அணி தீவிரமான பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான முகமது கைஃப் ஆசிய கோப்பை இந்திய அணி குறித்த சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
எட்டு அணிகள் பங்குபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் போட்டிகள் இன்று முதல் நடைபெற உள்ளன. இன்று முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் மோத உள்ளன. இதில் இந்திய அணி நாளை யுஏஇ அணியுடன் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்த தொடரில் விளையாட போகும் இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில் சூரியகுமார் யாதவ் கேப்டன் ஆகவும் சுப்மான்கில் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டனர்.
இந்த அணியில் ஆல்ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா மற்றும் அக்சார் பட்டேல் என இருவரும் அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான முகமது கைஃப், இந்திய அணி கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையை வென்ற போது அதில் ஜடேஜா, ஹர்திக் பாண்டியா மற்றும் அக்சார் பட்டேல் என மூன்று பேரும் சேர்ந்து இந்திய அணிக்கு ஒன்றாக பங்களிப்பு வழங்கியதை நினைவு படுத்தினார்.
மேலும் இந்திய அணியின் பேட்டிங் தரத்தையும், பந்துவீச்சு தரத்தையும் வலுப்படுத்த இன்னொரு ஆல் ரவுண்டர் தேவைப்படுகிறார் என்பதையும் அவர் கூறியிருக்கிறார். எனவே இந்த ஆசிய கோப்பையில் இரண்டு ஆல் ரவுண்டர்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் டி20 உலக கோப்பைக்கு முன்பாக வாஷிங்டன் சுந்தர் போன்ற ஆல் ரவுண்டரை இந்திய அணி நிச்சியமாக மிஸ் செய்யும் என்று முகமது கைப் பேசியிருக்கிறார்.
இதையும் படிங்க:ஐசிசி ஆகஸ்ட் மாதத்தின் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருது பட்டியல்.. சிராஜ்க்கு கிடைக்க வாய்ப்பு
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “ரோஹித் சர்மா தலைமையில் ஆன இந்திய அணி அக்சார், ஜடேஜா, ஹர்திக் பாண்டியா என மூன்று ஆல் ரவுண்டர்களுடன் டி20 உலக கோப்பையை வென்றது. அதாவது 6 பவுலிங் ஆப்ஷன் மற்றும் 8 வரை பேட்டிங் செய்ய வேண்டும். ஆசிய கோப்பையில் ஹர்திக் பாண்டியா மற்றும் அக்சார் பட்டேலுடன் இந்திய அணி புதிய வெற்றி கூட்டணியை கண்டறிய வேண்டும். இதில் வாஷிங்டன் சுந்தர் நிச்சயமாக மிஸ் செய்யப்படுவார் என்பதில் சந்தேகம் இல்லை” என்று அவர் பேசியிருக்கிறார்.






