இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா குறித்து இந்திய முன்னாள் வீரர் முகமது கைப் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்தியா நியூசிலாந்து பைனல்
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்து வருபவர் ரோஹித் சர்மா. இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு இந்திய அணி டி20 உலக கோப்பை தொடரில் தோல்வியடைந்த நிலையில் அதற்குப் பின்னர் ஆக்ரோஷமாக கிரிக்கெட் விளையாடும் பாணியை கடைபிடித்து விளையாடி வருகிறார். இந்திய அணிக்கு தொடக்கத்தில் அதிரடியான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு சென்றால் அதற்குப் பிறகு வரும் வீரர்கள், ஆட்டத்தை இறுதி வரை எடுத்துச் சென்று விடுவார்கள் என்று ரோகித் சர்மா இதே முறையில் விளையாடி வருகிறார்.
அதற்கு ரோகித் சர்மாவுக்கு கை மேல் பலனும் கிடைத்துள்ளது. 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பையில் விளையாடி இந்திய அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார். அதற்கு அடுத்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்திய அணி சாம்பியனாக முக்கிய காரணமாக அமைந்தார். இந்த சூழ்நிலையில் தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இதே முறையில் ஆன ஆட்ட பாணியை ரோகித் சர்மா கடைப்பிடித்து வரும் நிலையில் இது குறித்து இந்திய முன்னாள் வீரர் முகமது கைப் சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
ரோஹித் சர்மாவை பாதிக்காது
இதுகுறித்து கைப் விரிவாக கூறும்போது ” ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக மாறி நான்கு வருடங்கள் தான் ஆகிறது. அவரது சாதனைகளை சற்று பாருங்கள். தனது அணியை அனைத்து ஐசிஐசிஐ போட்டிகளில் இறுதிப்போட்டிக்கு அழைத்துச் செல்லும் ஒரே கேப்டன் ஆக ரோகித் சர்மா இருக்கிறார். இன்றைய போட்டியில் என்ன நடந்தாலும் அது அவரது தலைமை பொறுப்பை பாதிக்காது. ரோஹித் சர்மா ஒரு உண்மையான தலைவர் மற்றும் அவர் ஒரு ஜாம்பவான் வீரர்” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:ஒரு வேல இருக்குமோ.. ஜடேஜாவின் முடிவை சூசகமாக வெளிப்படுத்திய விராட் கோலி.. சோகத்தில் ரசிகர்கள்.. CT ஃபைனல்
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 251 ரன்கள் குவிக்க அதற்குப் பிறகு தற்போது விளையாடும் இந்திய அணி 13 ஓவர்கள் முடிவில் 94 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது. இதில் ரோஹித் 56 பந்துகளில் 7 போர் மற்றும் 3 சிக்ஸ் என 66 ரன்கள் குவித்து களத்தில் இருக்கிறார். தற்போது இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பது போல தெரிகிறது.






