ஒரு வேல இருக்குமோ.. ஜடேஜாவின் முடிவை சூசகமாக வெளிப்படுத்திய விராட் கோலி.. சோகத்தில் ரசிகர்கள்.. CT ஃபைனல்

0
327

துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டி நடைபெற்ற வருகிறது.

இதில் இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜாவை விராட் கோலி கட்டியணைத்த சம்பவம் குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பல கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

- Advertisement -

இந்தியா நியூசிலாந்து ஃபைனல்

துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் குவித்தது. இதில் இந்திய அணி வெற்றி இலக்கை நோக்கி விளையாடுவதற்கு தயாராகி வருகிறது.

இந்த சூழ்நிலையில் ரவீந்திர ஜடேஜா இந்த போட்டியில் 10 ஓவர்கள் வீசி 30 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார். டாம் லதாம் 14 ரன்னில் விளையாடிக் கொண்டிருந்தபோது அவரை எல்பிடபிள்யூ முறையில் ரவீந்திர ஜடேஜா அவரை வெளியேற்றினார். இந்த சூழ்நிலையில் தனது 10வது ஓவரை முடித்தவுடன் அவர் அருகே வந்த விராட் கோலி, ஜடேஜாவை கட்டியணைத்து ஏதோ கூறிவிட்டு சென்றார்.

- Advertisement -

ரவீந்திர ஜடேஜா ஓய்வா

இதனை கவனித்த ரசிகர்கள் ஒருவேளை ஜடேஜாவுக்கு இது கடைசி போட்டியாக இருக்குமோ? என்று சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். எப்போதுமே ஒரு போட்டியில் ஜடேஜா 10 ஓவர்கள் முழுமையாக வீசி முடிக்கும் நிலையில் விராட் கோலி இந்த போட்டிக்கு மட்டும் இவ்வாறு செய்தது ரசிகர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே இந்திய அணியில் ஆல் ரவுண்டர் வீரராக அக்சாசர் பட்டேல் இருப்பதால் 2027 ஆண்டு நடைபெற உள்ள ஒரு நாள் உலக கோப்பையில் ஜடேஜா இடம் பிடிப்பது கடினமாகிவிடும்.

இதையும் படிங்க:முதல் ஐசிசி தொடர்.. சாதித்த வருண் சக்கரவர்த்தி.. 2 திருப்புமுனைகள்.. புதிய வரலாறு உருவாகுமா?

எனவே இளைஞர்களுக்கு வழி விடும் வகையில், ஜடேஜா இந்த முடிவை எடுத்து இருக்கிறாரா? என்பது போட்டியின் முடிவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம். ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் ஜடேஜா தனது ஓய்வை அறிவித்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டியிலும் ஜடேஜா ஓய்வு முடிவை அறிவிக்கலாம் என்று தெரிகிறது. எனவே இந்த நிகழ்வை கண்ட ரசிகர்கள் தற்போது சோகத்தில் இருக்கிறார்கள்.

- Advertisement -