இந்திய கிரிக்கெட்

ரோகித்துக்கு மாற்று அபிஷேக் ஷர்மா இல்ல.. மொத்தமான ஜெராக்ஸ் இவர்தான் – முகமது கைஃப் பேட்டி

இந்திய அணிக்கு கிடைத்த சிறந்த கேப்டன்களில் ஒருவரான ரோகித் சர்மாவின் இடத்தை தற்போது இந்திய அணியில் யார் நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள்? என்பது குறித்து முகமது கைப் பேசி இருக்கிறார்.

- Advertisement -

தற்போது இந்திய அணி சூரியகுமார் யாதவ் தலைமையில் ஆசியக் கோப்பை டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் இரண்டு போட்டிகளை வென்று இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்ட இந்திய அணி இன்று ஓமான் அணிக்கு எதிராக விளையாடுகிறது.

பேட்டிங்கில் அபிஷேக் ஷர்மா

இந்திய அணி அதிரடியான முறையில் இனி தொடர்ந்து விளையாட வேண்டும் என கேப்டன் ரோஹித் சர்மா தானே அதிரடியாக விளையாடி ஆரம்பித்து வைத்தார். இதன் காரணமாக 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது. இதைத்தொடர்ந்து இந்திய அணி அதே அணுகுமுறையை பின்பற்றி வருகிறது.

இந்த நிலையில் டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா ஓய்வு பெற்ற பிறகு அவருடைய இடத்தை நிரப்பக்கூடிய வகையில் அபிஷேக் ஷர்மா சிறந்த அதிரடி தொடக்கத்தை டி20 கிரிக்கெட்டில் கொடுத்து வருகிறார். எனவே அவர் அடுத்த ரோஹித் சர்மாவாக மாறுவார் என பலரும் கூறி வருகிறார்கள்.

- Advertisement -

இவர் நிரப்பி விட்டார்

இதுகுறித்து முகமது கைப் பேசும்பொழுது “பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கேப்டன் சூரியகுமார் யாதவ் கடைசி வரை நின்று வெற்றிக்கான ரன்னை அடித்தார். மேலும் மீடியாக்களிடம் பேசும் பொழுது அவர் மிகவும் தெளிவாக இருந்தார். அந்த போட்டியில் ஒரு உண்மையான தலைவராக செயல்பட்டார். என்னைப் பொறுத்தவரை ரோகித் சர்மாவுக்கு அடுத்து சிறந்த தலைவராக இருக்கிறார். அவர் எப்போதும் செயல் திறனிலும் கவனமாக இருக்கிறார்”

இதையும் படிங்க : சூர்யா வேண்டாம் கில்லை கேப்டன் ஆக்குங்க.. ரிங்கு சிங் வேற வேலை செய்ற டைம் வந்துடுச்சு – முரளி கார்த்திக் பேச்சு

“ரோகித் சர்மாவுக்கு பிறகு இந்திய அணியை யார் வழி நடத்துவார்கள்? என்பது குறித்தான கேள்விக்கு அவர் பதில் அளித்து இருக்கிறார். பாகிஸ்தானுக்கு எதிரான பெரிய ஆட்டத்தில் அவர் தனது திறமையை வெளியில் காட்டினார். ஏனென்றால் இந்தியா போட்டியை புறக்கணிக்க வேண்டும் என பலரும் கூறியதால் இது எளிதான விஷயம் இல்லை. அவர் ஆட்டத்தை புத்திசாலித்தனமாக கட்டுப்படுத்தினார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by