இந்திய கிரிக்கெட்

பாபருக்கு சிக்ஸ் அடிக்கிற சக்தியே கிடையாது.. நீ சவாலா சொன்னது என்னப்பா ஆச்சு – முகமது கைஃப் கேள்வி

இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் பாகிஸ்தான் நட்சத்திர வீரர் பாபர் அசாமுக்கு 6 அடிக்கின்ற சக்தி இல்லை என்று கடுமையான முறையில் விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -

இன்று பாகிஸ்தான் அணி நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் பரபரப்பான சூழ்நிலையில் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பகார் ஜமான் விளையாட வேண்டிய இடத்தில் பாபர் அசாம் விளையாட வைக்கப்பட்டார்.

பாபரின் மெகா சொதப்பல்

மேலும் இந்த போட்டியில் பாகிஸ்தான் துவக்க ஆட்டக்காரர்கள் 148 ரன் டார்கெட்டுக்கு மிகச் சிறப்பான துவக்கத்தை கொடுத்திருந்தார்கள். ஆனால் நான்காவது இடத்தில் வந்த பாபர் அசாம் 18 பந்தில் 15 ரன்கள் மட்டுமே எடுத்தார். மேலும் அணியை பொறுமையாக வெற்றிக்கு அழைத்துச் செல்ல வேண்டிய அவர் விக்கெட்டையும் இழந்தார்.

இத்துடன் இந்த போட்டியில் நான்காவது இடத்தில் விளையாட வேண்டிய பகார் ஜமானுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வாய்ப்பு கொடுக்கவில்லை. தற்போது இது மிக கடுமையான விமர்சனங்களை உருவாக்கி வருகிறது. நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆல்ரவுண்டர் பாகிம் அஷ்ரப் இறுதியில் அதிரடி காட்டியதால் மட்டுமே பாகிஸ்தான் வென்றது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சொன்னது என்னப்பா ஆச்சு

பாபர் அசாம் தொடர்ந்து ஒரே முறையில் பழையபடியே டி20 கிரிக்கெட் தட்டி தட்டி விளையாடுகிறார். இது முன்பு டி20 கிரிக்கெட்டுக்கு சரியாக இருந்தது. ஆனால் தற்போது மாறி இருக்கும் டி20 கிரிக்கெட் வடிவத்தில் இந்த அணுகுமுறை சரிவராது.

இதையும் படிங்க: 2 ஓவர் 29 ரன்.. பதறிப்போன பாகிஸ்தான்.. காப்பாற்றிய பாஹிம் அஷ்ரப்.. நெதர்லாந்து மாஸ் காட்டியது – முதல் போட்டி முடிவுகள்

இதுகுறித்து பேசி உள்ள முகமது கைஃப் கூறும் பொழுது “இப்போதுதான் சிக்ஸர் அடிப்பேன் என்று சொல்லி இருந்தீர்கள் ஆனால் அது எங்கே? அவரால் ஒரு சிக்ஸர் கூட அடிக்க முடியவில்லை. சிக்ஸர் அடிப்பதற்கு தேவையான சக்தி அவரிடம் இல்லை. அவரால் சிங்கிள் மற்றும் டபுள்ஸ் எடுத்து ஆட்டத்தை நகர்த்த மட்டுமே முடியும். ஒவ்வொரு முறை பெரிய ஷாட் அடிக்க முயற்சி செய்ய பொழுதும் அவர் விக்கெட்டை இழக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts