அடுத்த ஏபி டிவில்லியர்ஸ் கிடைச்சாச்சு.. இந்த பையன் எல்லா பந்தையும் அடிக்கிறார் – அம்பதி ராயுடு பேச்சு

0
4060
Ambati

நவீன கிரிக்கெட் காலத்தில் ஏபி டி வில்லியர்ஸ் மிகவும் முக்கியமான பேட்ஸ்மேனாக பார்க்கப்படுகிறார். அவர் விளையாடிய சில அசாதாரணமான கிரிக்கெட் ஷாட்கள், அடுத்து வந்த தலைமுறை வீரர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏபி டிவில்லியர்ஸ் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், அவருடைய இடத்தை நிரப்ப சரியான ஒரு இளம் வீரர் இருப்பதாக அம்பதி ராயுடு கருதுகிறார்.

ஏபி டி வில்லியர்ஸ் ஒரு முன்னணி பேட்ஸ்மேனாக நீண்ட காலம் அசாதாரணமான முறையில் ஷாட்கள் விளையாடி வந்திருக்கிறார். அவர் தொடர்ச்சியாக இதை வெற்றிகரமாக செய்து காட்டிய காரணத்தினால், அவருடைய பாணியில் விளையாடி வெற்றியடையும் என்கின்ற நம்பிக்கை கிரிக்கெட் உலகில் உருவானது.

- Advertisement -

இதற்குப் பிறகு அவரைப் போல் எந்தவித அச்சமும் இன்றி புதுமையான ஷாட்களை ஆட்டத்தில் எல்லா நேரத்திலும் அடிக்கக்கூடிய வீரர்கள் வர ஆரம்பித்திருக்கிறார்கள். சந்தேகமில்லாமல் இந்த மாற்றத்திற்கான அடித்தளத்தை உருவாக்கியதில் பெரிய பங்கு ஏபி டி வில்லியர்ஸ்க்கு இருக்கிறது.

இந்த நிலையில் இவரது இடத்தை நிரப்ப முடிந்த வீரர் குறித்து பேசிய அம்பதி ராயுடு “டெல்லி அணிக்காக விளையாடும் தென் ஆப்பிரிக்காவின் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஒரு ஆல் ரவுண்டு பேக்கேஜ். அவர் ஒரு அழகான ஓவரையும் நேற்றைய போட்டியில் வீசினார். இந்த ஐபிஎல் சீசன் முழுவதும் அவர் பந்தை அடித்த விதம் அபாரம் ஆனது. மேலும் அவர் ஷாட் பந்துகளில் ஆரம்பித்து புல்லர் பந்துகள் வரையில் அடிக்கிறார்.

மேலும் அவர் மெதுவான பந்துகளையும் மிகச் சிறப்பான முறையில் கணித்து அடித்து விளையாடுகிறார். இவரிடம் அபாரமான திறமை இருப்பதாக நான் உணர்கிறேன். ஏபி டி வில்லியர்ஸ் மாதிரியான வீரர்களில் இவரும் ஒருவர். அந்த இடத்திற்கு செல்ல நீண்ட தூரம் இருக்கிறது. ஆனால் இவர் ஏபி டி வில்லியர்ஸ் போல மாறுவதற்கான அழகான திறமைகளைப் பெற்று இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க: சொன்னா நம்ப மாட்டீங்க.. நாங்க திரும்பி வந்து ஜெயிக்கிறதுக்கு காரணம் இதுதான் – ரஜத் பட்டிதார் பேட்டி

நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 13 போட்டிகளில், 54 சராசரியில், 191 ஸ்ட்ரைக் ரேட்டில் 378 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் மூன்று அரை சதங்கள் அடக்கம். மேலும் 18 முதல் 20 வரையிலான கடைசி மூன்று ஓவர்களில் மட்டும் 54 பந்துகளை சந்தித்து 173 ரன்கள் நொறுக்கி தள்ளி இருக்கிறார். இதில் மட்டும் இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 320.40. இதில் மொத்தம் 13 பவுண்டரிகள் மற்றும் 15 சிக்ஸர்கள் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.