இந்திய கிரிக்கெட்

சிராஜ் இருந்தா இது நடக்காது.. ஆனா அதை தாண்டி அரிய சம்பவத்தை இவர் செஞ்சிட்டார் – முகமது கைப் பாராட்டு

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா வீசிய சிறப்பான பந்துவீச்சை முன்னாள் வீரர் முகமது கைஃப் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

​கொழும்புவில் நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்திலும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து நல்ல லைன் மற்றும் லென்த்தில் பந்துவீசி விக்கெட்டுகளைக் கைப்பற்றி எதிரணிக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

​இந்த தொடரில் மற்ற பந்துவீச்சாளர்களை விட பிரசித் கிருஷ்ணா காட்டிய வேகம் மற்றும் முயற்சி உண்மையிலேயே பாராட்டுக்குரியது. குறிப்பாக அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை விடவும் இவர் மிகச் சிறந்த முறையில் தனது திறமையை வெளிப்படுத்தி எதிரணி பேட்டர்களுக்குப் பெரும் சவாலாக விளங்கியுள்ளார்.

​இந்த போட்டியில் பிரசித் கிருஷ்ணாவின் பந்துவீச்சு குறித்து முகமது கைஃப் பேசும்போது “இந்த ஆடுகளத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாகவே பந்துவீசியுள்ளனர். பிரசித் கிருஷ்ணா தனது இயல்பான லென்த்தில் பந்துவீசினார். அவர் வேகமாகவும் பந்துவீசினார். முகமது சிராஜை விட ஒருவர் இவ்வளவு சிறப்பாகச் செயல்படுவதை நீங்கள் அரிதாகவே பார்ப்பீர்கள்”

- Advertisement -

“சிராஜ் 45 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சீனியர் பந்துவீச்சாளர். பிரசித் கிருஷ்ணாவிற்கு இது 9-வது டெஸ்ட் மட்டுமே. இருப்பினும் இந்தத் தொடரில் வேகம், முயற்சி என அனைத்து விஷயங்களிலும் பிரசித் கிருஷ்ணா முன்னோக்கி இருக்கிறார். அவர் கைப்பற்றிய விக்கெட்டுகள் மிகச் சிறப்பான பந்துவீச்சால் கிடைத்தவை” என்று கூறி இருக்கிறார்.

​மேலும் இந்த போட்டியில் அவரது உத்திகள் குறித்து புஜாரா பேசும்போது “இன்றைய முதல் செஷனில் அவர் தனது ஆங்கிளை மாற்றியபோதுதான் அவருக்கு வெற்றி கிடைத்தது. அவர்கள் ஒரு கேம் பிளான் செய்தனர். அதன்பிறகு அவர் ஷார்ட் பால்களைத் தொடர்ந்து வீசினார். பேக் ஆஃப் லென்த் டெலிவரி அவரது தனிச்சிறப்பு. அதனுடன் பவுன்சரையும் நன்றாகப் பயன்படுத்தினார். அதனால் தான் அவருக்கு பவுன்சர்களில் விக்கெட்டுகள் கிடைத்தன. நேற்றும் இன்றும் அவர் நல்ல ஸ்பெல் வீசினார்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by