திலக் வர்மாவை பார்த்து.. எங்க பாகிஸ்தான் வீரர்கள் இத கத்துக்கோங்க – முகமது அமீர் விமர்சனம்

0
349
Tilak

இந்திய அணியின் இளம் வீரர் திலக் வர்மா எப்படி விளையாடுகிறார் என்று பாகிஸ்தான் வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது அமீர் கூறியிருக்கிறார்.

நடந்த முடிந்த ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் திலக் வர்மா மிகச் சிறப்பாக விளையாடி 53 பந்தில் ஆட்டம் இழக்காமல் 69 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். இந்த ஆட்டம் இந்திய டி20 அணியில் அவருடைய இடத்தை உறுதி செய்திருக்கிறது.

- Advertisement -

புத்திசாலித்தனமான பேட்டி

இந்திய அணி முக்கியமான இறுதிப்போட்டியில் 20 ரன்னுக்கு முக்கியமான மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தது. இந்த நிலையில் திலக் வர்மா மிகவும் புத்திசாலித்தனமாக நிதானத்தை கைவிடாமல் விளையாடினார். மேலும் அதிகம் ரிஸ்க் இருக்கும் எந்த ஷாட்டையும் அவர் தேர்வு செய்யவில்லை.

மேலும் தவறான பந்துகள் கிடைக்கும் பொழுது உடனுக்குடன் தண்டித்து ரன்கள் சேர்த்தார். இதன் காரணமாக ஓவருக்கு அடிக்க வேண்டிய ரன் விகிதம் உயராமல் பார்த்துக் கொண்டார். அதே நேரத்தில் ரன் வித்தியாசம் குறைந்ததும் கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடி அணியை பெற்று பெறவும் வைத்தார். இன்னிங்ஸ் பில்டப் பண்ணக்கூடிய அவரது அறிவு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

- Advertisement -

பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்

இதுகுறித்து முகமது அமீர் கூறும் பொழுது ” திலக் வர்மாவுக்கு ஆட்டத்தை பற்றிய நல்ல புரிதல் இருக்கிறது. பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. எந்த ஷாட்டை எப்பொழுது விளையாடுவது என பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு தெரியாது. இதை அவர்கள் அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்”

இதையும் படிங்க : வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. தோனி காலத்தை கம்பீர் மாற்றுவாரா? – முழு அலசல்

“திலக் வர்மா மிகவும் புத்திசாலித்தனமான ஷாட்களை விளையாடினார். தேவையற்ற விதத்தில் அவர் விளையாடவே இல்லை. மேலும் அவர் சிறப்பான முறையில் சிங்கிள் ரன் ஓடி எடுத்தார். யாராவது போட்டியில் வெற்றி பெற விரும்பினால் அவர் திலக் வர்மா போல பொறுப்புடன் விளையாட கற்றுக் கொள்ள வேண்டும்” எனக் கூறியிருக்கிறார்.

- Advertisement -