இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் நாளை மறுநாள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இதற்கான இந்திய பிளேயிங் லெவன் எவ்வாறு அமையலாம்? என்பது குறித்து பார்க்கலாம்.
வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்கிறது. முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 2ம் தேதி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுகிறது. 2வது டெஸ்ட் போட்டி அக்டோபர் 10ம் தேதி டெல்லி மைதானத்தில் நடக்கிறது.
தோனி காலம் மாறுமா?
தோனி இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றதும் இந்திய ஆடுகளங்கள் டெஸ்ட் போட்டிக்கு முழுமையாக சுழல் பந்துவீச்சு சாதகமாக இருக்கும் வகையில் மாற்றப்பட்டன. பிறகு விராட் கோலி கேப்டனாக வந்ததும் இந்த நிலை மாறியது. அதே சமயத்தில் ரோகித் சர்மா கேப்டன் ஆக வந்ததும் சுழல் பந்துவீச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதனால் பேட்ஸ்மேன்கள் ரன் எடுப்பது சிரமமாக மாறியது.
இந்திய முன்னாள் வீரர் உஜாரா இனி சுழல் பந்துவீச்சு அதிக சாதகம் கொண்ட ஆடுகளங்களை அமைக்க வேண்டாம், இது பேட்ஸ்மேன்கள் தன்னம்பிக்கையை உடைக்கிறது என கூறியிருந்தார். தற்போது இந்தியாவில் நடைபெறும் இந்த டெஸ்ட் தொடருக்கு வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி சேர்க்கப்பட்டிருக்கிறார். எனவே சுழல் பந்து வீழ்ச்சிக்கு சாதகமான ஆடுகளம் அமைக்கப்படுவதில் இருந்து வெளியில் வருகிறார்களா? எனக்கு கிரிக்கெட் வல்லுனர்கள் விவாதித்து வருகிறார்கள்.
குல்தீப்க்கு வாய்ப்பு வேண்டும்
இந்த தொடருக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் டெஸ்ட் அணியில் ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், அச்சர் படேல் குல்தீப் யாதவ் என நான்கு ஸ்பின்னர்கள் இடம் பெற்று இருக்கிறார்கள். அதே சமயத்தில் பூம்ரா சிராஜ் மற்றும் பிரதீப் கிருஷ்ணா என மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். மேலும் கருண் நாயர் இடத்தில் தேவ்தத் படிக்கல் இடம் பெற்று இருக்கிறார்.
15 பேர் கொண்ட அணி : கில் (கே), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல்.ராகுல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரல் (விகீ), ரவீந்திர ஜடேஜா (விசி), வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, அக்சர் படேல், நிதிஷ் குமார் ரெட்டி, என் ஜகதீசன் (விகீ), சிராஜ், பிரசித் கிருஷ்ணா மற்றும் குல்தீப் யாதவ்.
இதையும் படிங்க: ஆஸ்திரேலிய தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா விலகல்.. மிகவும் வருத்தமாக இருப்பதாக கருத்து
பிளேயிங் XI : ஜெய்ஸ்வால், கேஎல்.ராகுல் சாய் சுதர்ஷன், கில், தேவ்தத் படிக்கல், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜுரல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், பும்ரா மற்றும் சிராஜ்.






