இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்த மகேந்திர சிங் தோனி அனைத்து விதமான ஐசிசி கோப்பைகளை இந்திய அணிக்காக வென்று கொடுத்து மிகவும் வெற்றிகரமான கேப்டன் ஆக திகழ்கிறார்.
இந்த சூழ்நிலையில் மகேந்திர சிங் தோனி குறித்து அவரோடு விளையாடிய இந்திய முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தோனியிடம் பிடிக்காத குணம் ஒன்றை தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன் தோனி
மகேந்திர சிங் தோனி 2019ஆம் ஆண்டு ஒரு நாள் உலக கோப்பை தொடரில் விளையாடிய பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்தார். அதற்குப் பிறகு தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டுமே விளையாடி வரும் நிலையில் ஐபிஎல் தொடரிலும் இன்னும் ஓரிரு ஆண்டுகள் மட்டுமே விளையாடுவார் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் தோனி இந்த சீசனில் சென்னை அணிக்காக விளையாடுவது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
2007ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்கு கேப்டனாக திகழ்ந்த போது அந்த அணியில் விளையாடியவர் ராபின் உத்தப்பா. அந்த தொடரில் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் டி20 உலக கோப்பையை வெல்வதற்கும் இவர் முக்கிய காரணமாக அமைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் உத்தப்பா தற்போது அளித்துள்ள ஒரு பேட்டியில் மகேந்திர சிங் தோனியிடம் பிடிக்காத குணம் ஒன்று குறித்து தனது கருத்தினை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அவரிடம் பிடிக்காத விஷயம் இதுதான்
இது குறித்து அவர் கூறும் பொழுது “நானும் மகேந்திர சிங் தோனியும் நல்ல நண்பர்கள். அவரோடு நான் அடிக்கடி உரையாடும் அளவுக்கு எங்கள் பழக்கம் இருந்திருக்கிறது. மேலும் அவர் தனது தொலைபேசியை எப்போதுமே வைத்திருக்க மாட்டார். இது அவரிடம் பிடிக்காத ஒரு எரிச்சல் ஊட்டக்கூடிய குணமாகும். நீங்கள் தோனியை அவ்வளவு எளிதாக தொடர்பு கொள்ள முடியாது. எவ்வளவு நெருங்கிய நண்பர்களாக இருந்த போதும் நாங்கள் தோனியை பார்க்கும்போது நாங்கள் வருகிறோம் என்று அவரது மேலாளரிடம் தான் தெரிவிக்க முடியும்” என்று உத்தப்பா கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:யுவராஜ் சிங் உடல்நிலை சுத்தமா முடியல.. அப்ப கூட பெருமைமிக்க தந்தையா இதைத்தான் சொன்னேன் – யோக்ராஜ் சிங் பேட்டி
மகேந்திர சிங் தோனி பொதுவாக சமூக வலைதளங்கள் பெரிதாக பயன்படுத்த மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அதில் தனக்கு அவ்வளவு ஆர்வம் இல்லை என்று சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் தோனி கூறி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே உத்தப்பா கூறுவதை பார்க்கும் போது தோனிக்கும் தொடர்பு ஊடகங்களுக்கும் இருக்கும் இடைவெளி என்று மிகவும் பெரிதாகவே தெரிகிறது.