நேற்று இந்திய அணி டி20 உலகக் கோப்பை தொடரை கைப்பற்றியதுக்கு நியூசிலாந்து பவுலர்களே காரணம் என முகமது அமீர் மீண்டும் சர்ச்சைக்குரிய முறையில் பேசி இருக்கிறார்.
இந்த போட்டியில் இந்திய அணி பவர் பிளேவில் மட்டும் விக்கெட் இழப்பில்லாமல் 92 ரன்கள் குவித்தது. ஒரு உலகக் கோப்பை தொடரில் பவர் பிளேவில் எடுக்கப்பட்ட மிக அதிகபட்ச ரன்னாக இது பதிவாகியது. மேலும் ஒட்டுமொத்தமாக 250 ரன்கள் 20 ஓவர்களில் எடுத்தது.
இந்த நிலையில் தொடர்ந்து இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்லாது என்று கூறிவரும் முகமது அமீர் இந்த முறையும் முதலில் இந்திய அணிக்கு கிரெடிட் கொடுக்காமல், இந்திய அணியின் வெற்றிக்கு நியூசிலாந்து பவுலர்கள் முக்கிய காரணம் என முதல் கிரெடிட் கொடுத்து சர்ச்சையை ஆரம்பித்து இருக்கிறார்.
இதுகுறித்து முகமது அமீர் பேசும் பொழுது “முதலில் நியூசிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு கிரெடிட் கொடுக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் நிறைய வைடுகள் வீசினார்கள். அந்த பந்துகளில் சிக்ஸர்கள் சென்றன. இந்தியாவுக்கு எந்த கிரெடிட் கொடுக்கக் கூடாது என நான் சொல்லவில்லை. ஆனால் நியூசிலாந்து பவுலர்களை ரொட்டேட் செய்தது எனக்கு மிக குழப்பமாக இருந்தது”
“அபிஷேக் ஷர்மா ஸ்பின்னர்களுக்கு கஷ்டப்படுவார் என்று தெரிந்தும் ஜேக்கப் டப்பியை மூன்றாவது ஓவருக்கு ஏன் கொண்டு வந்தார்கள் என்று தெரியவில்லை. 2005 ஆம் ஆண்டு முதல் நியூசிலாந்து அணியை பின்தொடர்கிறேன், ஆனால் அவர்கள் இவ்வளவு அழுத்தத்தில் விளையாடி நான் பார்க்கவில்லை”
இதையும் படிங்க : அடுத்த ரெண்டு நாள் என்னனு ஏற்கனவே முடிவு பண்ணிட்டோம்.. ஐபிஎல்க்கு இப்படித்தான் வருவோம் – திலக் வர்மா தகவல்
“அதே சமயத்தில் இந்தியாவையும் பாராட்ட வேண்டும். வேகப்பந்துவீச்சாளர்கள் தொடர்களை வென்று கொடுப்பார்கள் என்பதை மாற்றி பேட்ஸ்மேன்களும் வென்று கொடுக்க முடியும் என காட்டி இருக்கிறார்கள். தொடர்ந்து இரண்டு போட்டிகளில் 250 ரன்கள் தாண்டி எடுத்து வெற்றி பெற்று இருக்கிறார்கள்” என்று கூறி இருக்கிறார்.