தற்போது டி20 உலக கோப்பை தொடரில் சரியாக செயல்படாத பாகிஸ்தான் அணியினருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அபராதம் விதித்தது. இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது அமீர் விமர்சனம் தெரிவித்திருக்கிறார்.
நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அறையிறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் மதிப்பில் 50 லட்சம் ரூபாய் அபராதத்தை ஒவ்வொரு வீரர்கள் மீதும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விதித்தது குறிப்பிடத்தக்கது.
மோசமான முன்னுதாரணம்
இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கு பாபர் அசாம் தேர்ந்தெடுக்கப்பட்டது பல விமர்சனங்களை ஆரம்பத்திலேயே உருவாக்கியது. மேலும் பாகிஸ்தான் சரியான வீரர்களை இலங்கை சூழ்நிலைக்கு தேர்ந்தெடுக்கவில்லை என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் குற்றம் சாட்டினார்கள்.
அதே சமயத்தில் பாகிஸ்தான் அணி கடந்த இரண்டு வருடங்களில் செயல்பட்டதை விட இந்த உலகக் கோப்பை தொடரில் ஓரளவுக்கு நன்றாகவே விளையாடியிருந்தது. இந்த நிலையில் இவ்வளவு கோபத்துடன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடந்து கொள்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தவறானது
இதுகுறித்து முகமது அமீர் பேசும் பொழுது “அபராதம்தான் தீர்வு என்று நினைத்தால் நீங்கள் தேர்வாளர்கள் முதல் நிர்வாகிகள் வரை எல்லோருக்குமே அபராதம் விதிக்க வேண்டும். தவறான வீரர்களை தேர்வு செய்ததற்கு நீங்கள் தேர்வாளர்களை தண்டிக்க வேண்டும். இதற்கு நீங்கள் வீரர்களை பலிகடா ஆக்குவதை நிறுத்துங்கள். வீரர்கள் ஏன் எப்போதும் கஷ்டப்பட வேண்டும்?”
இதையும் படிங்க : மலை உச்சியில் இருக்க வேண்டியவர்.. நீண்டகாலமா சாதாரணமா சுத்திட்டு வந்திருக்காரு.. சாம்சன் குறித்து இந்திய முன்னாள் வீரர்
“அபராதம் இதற்கு தீர்வு கிடையாது. நான் ஆரம்பம் முதல் உள்நாட்டு கிரிக்கெட்டில் முதலீடு செய்யுங்கள் என்று சொல்லி வருகிறேன். நீங்கள் அதைச் செய்யாமல் எந்த வீரர் மீதாவது கோபம் இருந்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்காதீர்கள். அவர்களை அணியில் இருந்து நீக்கிவிட்டு இரண்டு வருடம் உள்நாட்டு கிரிக்கெட் விளையாட சொல்லுங்கள். அதைவிட மிகப்பெரிய தண்டனை ஒரு வீரருக்கு இருக்க முடியாது” என்று கூறி இருக்கிறார்.






