இந்திய அணியை தெ.ஆ மைதானத்தில் இழுத்துச் சென்றார்கள்.. பிரமாதமா அவமானப் படுத்திட்டாங்க – சக்லைன் முஸ்டாக் விமர்சனம்

0
12
Mushtaq

நேற்று தென் ஆப்பிரிக்க அணி தங்களது சிறப்பான செயல்பாட்டால் இந்திய அணியை அவமானப்படுத்தி விட்டார்கள் என்றே கூறலாம் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சக்லைன் முஸ்டாக் விமர்சனம் செய்திருக்கிறார்.

நேற்று இந்திய அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் தென் ஆப்பிரிக்க அணியிடம் முழுமையாக சரணடைந்து 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதன் காரணமாக இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு மிக கடினமாக மாறி இருக்கிறது.

- Advertisement -

அசத்திய தென் ஆப்பிரிக்கா

நேற்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி ஆரம்பத்திலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்த பொழுதும் கூட, அடுத்து வந்த வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடி ரன் ரேட்டை உயர்வாக எடுத்துச் சென்றார்கள். ஹர்திக் பாண்டியா பேசிய கடைசி ஓவரில் 20 ரன்கள் எடுத்து போட்டியை முடித்தார்கள்.

இதற்கு அடுத்து பந்துவீச்சுக்கு வந்த பொழுது அவர்களுடைய செயல்பாடு இன்னும் மிகச் சிறப்பாக இருந்தது. இந்திய பேட்ஸ்மேன்களை தாக்கி விளையாடுவதற்கு ஒரு இன்ச் கூட விடவில்லை. இதன் காரணமாக அழுத்தம் அதிகரித்து இந்திய அணி சுருண்டது. மேலும் தென் ஆப்பிரிக்க பீல்டிங் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது.

- Advertisement -

அவமானப்படுத்தி விட்டார்கள்

இதுகுறித்து சக்கலைன் முஸ்டாக் பேசும்பொழுது “இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் திட்டங்கள் அனைத்தும் செம்மையான முறையில் பலன் கொடுத்தது. அவர்கள் இந்திய அணியை மைதானத்தில் இழுத்துச் சென்றார்கள். உண்மையைச் சொல்வதாக இருந்தால் அவர்களது சிறப்பான செயல்பாட்டால் இந்திய அணியை அவமானப்படுத்தி விட்டார்கள். சமீபத்தில் இந்திய அணி பெற்று இருந்த உயர்வை ஒன்று அல்லது இரண்டு படி அவர்கள் கீழே இறக்கி விட்டார்கள்”

இதையும் படிங்க : சாம்சனை நாங்க ஒதுக்கி வைக்கல.. ஆனா நாங்க இந்த பேச்சுவார்த்தைய உடனே ஆரம்பிக்க போறோம் – துணை பயிற்சியாளர் பேச்சு

“தென் ஆப்பிரிக்காவின் திட்டமிடல் மூன்று துறைகளிலும் மிகச் சிறப்பாக இருந்தது. நேற்று அபிஷேக் ஷர்மா அடித்த பந்தை கார்பின் போஸ் பிடித்த விதம்தான் அவர்கள் எவ்வளவு ஒருங்கிணைந்து விளையாடுகிறார்கள் என்பதை காட்டுகிறது. கேசவ் மகாராஜுக்கு தான் ஓடிக் கொண்டிருக்கும் பொழுது சிக்னல் கொடுத்து அந்தப் பந்தை அபாரமாக பிடித்தார். அவர்கள் இருவரும் காட்டிய ஒருங்கிணைவுதான் தென் ஆப்பிரிக்க வீரர்கள் எவ்வளவு ஒருங்கிணைவாக விளையாடுகிறார்கள் என்பதற்கான சாட்சி” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -