“சிஎஸ்கே டீம் வீக்கா இருந்தாலும்.. அவர் ஒருத்தர் இருந்தா போதும் ஜெயிக்கலாம்” – மொயின் அலி பேட்டி

0
796
Moeen

மார்ச் 8. தற்போது இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் டெஸ்ட் தொடர் மார்ச் 11ம் தேதி உடன் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வருகிறது. இதற்கு அடுத்து மார்ச் 22 ஆம் தேதி முதல் இந்தியாவில் 17 வது ஐபிஎல் சீசன் நடைபெற இருக்கிறது. தற்போது எல்லா அணிகளுமே இதற்கான பயிற்சி முகாம்களை அமைத்து பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்துவிட்டன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி சென்னை வந்து பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். மேலும் சர்வதேச கிரிக்கெட் இல்லாத எல்லா வீரர்களும் ஐபிஎல் பயிற்சிக்கு வரிசையாக திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் மெல்ல மெல்ல தற்பொழுது ஐபிஎல் குறித்தான எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிகரித்தபடி இருக்கிறது.

- Advertisement -

2022 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அதன் ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான ஆண்டாக பதிவானது. ஆனால் இதற்கு அடுத்து 2023 ஆம் ஆண்டு திரும்பி வந்து மிகச் சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி ஐபிஎல் தொடரில் ஐந்தாவது சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

கடந்த ஐபிஎல் சீசனில் கால் முட்டியில் ஏற்பட்டு காயத்துடன் கடுமையாக போராடி கேப்டன் மகேந்திர சிங் தோனி விளையாடி இருந்தார். அதே சமயத்தில் அவர் பந்தை கனெக்ட் செய்யும் விதம் மீண்டும் அற்புதமாக மாறி இருந்தது. சரியாக ஓடி விளையாட முடியாத காரணத்தினால் கடைசியில் வந்த அவர் அதிரடியாக சிக்ஸர்கள் அடித்து தனது திறமையை காட்டினார்.

இந்த நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் சீசனுக்கான எதிர்பார்ப்புகள் ஆரம்பித்துள்ள சூழ்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த மூன்று ஆண்டுகளாக இடம் பெற்று விளையாடி வரும் இங்கிலாந்து அணியின் ஆல் ர்வுண்டர் மொயின் அலி மகேந்திர சிங் தோனி குறித்தும், தனது கிரிக்கெட் எதிர்காலம் குறித்தும் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து மொயின் அலி கூறும் பொழுது “தோனி ஒரு சிறப்பான வீரர் மற்றும் சிறந்த கேப்டன் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம். நான் மூன்று ஐபிஎல் சீசன்கள் அவருடன் இணைந்து விளையாடி இருக்கிறேன். ஆனால் அவர் என்ன மாதிரி திட்டத்துடன்வருகிறார் என்பது குறித்து எனக்கு எதுவுமே தெரியாது. அவர் உற்சாகமான ஒரு வீரர். உங்கள் அணி பலவீனமாக இருந்தாலும், பேப்பரில் பலமாக இருந்தாலும், தோனி உங்கள் அணியின் கேப்டனாக இருக்கிறார் என்றால் உங்களுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க : 9 மாதம் கழித்து முதல் பந்தில் ரோகித்தை காலி செய்த ஸ்டோக்ஸ்.. கில்லை பேசி விக்கெட் எடுத்த ஆண்டர்சன்

நான் தொடர்ந்து நன்றாக விளையாடும் வரை என்னால் அணிக்கு பங்களிக்க முடியும் என்று நம்புகிறேன். இம்ரான் தாஹிர் 44 வயதிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். இதேபோல் சோயப் மாலிக் தொடர்ந்து விளையாடுகிறது. இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடாதது உலகம் முழுவதும் லீக் போட்டிகளில் விளையாட உதவுகிறது. ஒரு காலத்தில் விளையாடுவதற்கு எனது உடல் ஒத்துழைக்காமல் போகும். அதுவரையில் நான் தொடர்ந்து விளையாடுவேன்” என்று கூறியிருக்கிறார்.