இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய பேட்ஸ்மேன் யார் என்பது குறித்து மொயின் அலி கூறியிருக்கிறார்.
நடைபெற்று முடிந்த இந்த தொடரில் 700க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்து இந்திய கேப்டன் கில் தொடர் நாயகன் விருதை வென்றார். இருந்த போதிலும் கூட தொடரில் இந்திய அணியில் சமநிலையை சரியாமல் பார்த்துக் கொண்ட வீரர் என இன்னொரு பேட்ஸ்மேனை மொயின் அலி கூறியிருக்கிறார்.
வரலாற்று சிறப்பு தொடர்
இந்தத் தொடரில் துவக்க வரிசையில் கேஎல்.ராகுல் 500க்கும் மேற்பட்ட ரன்கள், ஜெய்ஸ்வால் 400க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்தார்கள். இதே போல மிடில் வரிசையில் கில் 700க்கும் மேற்பட்ட ரன்கள், ரிஷப் பண்ட் 400க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்தார்கள். முக்கியமாக கீழ் வரிசையில் ரவீந்திர ஜடேஜா 500க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்தார்.
இந்த அளவிற்கு இந்திய பேட்டிங் யூனிட் இங்கிலாந்து தொடரில் ஆதிக்கம் செலுத்தியது. பந்து வீச்சாளர்கள் ஒருபுறம் கடினமான உழைப்பை கொடுத்த பொழுதும், அவர்களுக்குத் தேவையான ரண்களை இந்திய பேட்ஸ்மெண்ட்கள் மிகச் சிறப்பாக விளையாடி எடுத்துக் கொடுத்து இருக்கிறார்கள். குறிப்பாக ஒரு யூனிட்டாக இணைந்து அற்புத செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
இவர்தான் சிறந்தவர்
இதுகுறித்து மொயின் அலி பேசும் பொழுது “கேஎல்.ராகுல் போன்ற ஒருவர் எவ்வளவு சிறந்தவர் என்பதை இன்னும் மக்கள் சரியாக உணரவில்லை. குறிப்பாக இந்த இங்கிலாந்து தொடரிலும் கடந்த இங்கிலாந்து தொடரிலும் அவர் மிகச் சிறப்பாக இருந்தார். கில் தற்போது சிறப்பாகத்தான் விளையாடி இருந்தார். ஆனால் இந்திய அணிக்கு நீண்ட காலமாக விளையாடியதில் சிறந்தவராக நான் கேஎல்.ராகுலை பார்க்கிறேன்”
இதையும் படிங்க : ரிஷப் பண்ட்டுக்கு சோகம்.. கிரிக்கெட்டில் நீண்ட விலகல் விலகல்.. 2026 டி20 WCல் ஆட முடியுமா?.. புதிய நெருக்கடி
“அவர் சிறந்த வீரர் உலகின் சிறந்தவராக இருக்கிறார் என்று நான் பார்க்கிறேன். நான் இதை சில காலமாகவே சொல்லி வருகிறேன். அவர் சில நேரங்களில் ஹேண்ட் பிரேக்கை எடுப்பதே கிடையாது. அந்த அளவிற்கு தரமாக தற்காப்பாக இருக்கிறார். அவர் உலகின் சிறந்த வீரர்களில் ஒருவர் என்று கூறுவேன்” என தெரிவித்திருக்கிறார்.






