இந்திய கிரிக்கெட்

அடுத்த சிறந்த 4 பேட்ஸ்மேன்கள் இந்த பசங்கதான்.. இதுல ஆஸி பாக் தெ.ஆ க்கு இடமில்ல – மொயின் அலி கணிப்பு

சர்வதேச கிரிக்கெட்டில் அடுத்த சிறந்த நான்கு பேட்ஸ்மேன்களாக எந்த இடம் வீரர்கள் இருப்பார்கள் என்பது குறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர் மொயின் அலி கூறியிருக்கிறார்.

- Advertisement -

தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி, ஸ்மித், ஜோ ரூட் கேன் வில்லியம்சன் என நான்கு பேட்ஸ்மேன்கள் தலைசிறந்தவர்களாக இருந்து வருகிறார்கள். இதில் நுழைய பாகிஸ்தானின் பாபர் அசாம் சிறப்பாக போட்டியிட்டார். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக பார்ம் சரிந்ததால் வெளியேறிவிட்டார்.

இவர்களுக்கு இடம் இல்லை

இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணிக்காக மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் ஆல்ரவுண்டராக அதேசமயத்தில் பேட்டிங் வரிசையில் மேலே வந்து சிறப்பாக விளையாடக்கூடிய கேமரூன் கிரீனை இந்த பட்டியலில் மொயின் அலி சேர்க்கவில்லை.

இதே போல தென் ஆப்பிரிக்காவில் இருந்து ஜூனியர் ஏபி.டிவில்லியர்ஸ் என்று அழைக்கப்படும் டிவால்ட் ப்ரிவியஸ்க்கும் இடம் கொடுக்கவில்லை. மேலும் பாகிஸ்தான், இலங்கை போன்ற கிரிக்கெட் நாடுகளிலும் எந்த இளம் வீரரையும் அவர் தேர்வு செய்யவில்லை.

- Advertisement -

இந்த நால்வர்தான் சிறந்தவர்கள்

இந்த நிலையில் மொயின் அலி சர்வதேச கிரிக்கெட்டில் அடுத்த சிறந்த நான்கு பேட்ஸ்மேன்களாக இந்தியாவின் ஜெய்ஸ்வால், கில், இங்கிலாந்தின் ஹாரி புரூக் மற்றும் நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்தரா ஆகியோரை தேர்ந்தெடுத்திருக்கிறார்.

இதையும் படிங்க : 2025 ஆசியக் கோப்பை.. இந்திய அணிக்கு காத்திருக்கும் சோகம்.. வரலாற்றில் முதல் முறை – வெளியான தகவல்கள்

இது குறித்து மொயின் அலி பேசும் பொழுது ” எந்த ஒரு தொழில் முறை கிரிக்கெட்டிலும் இங்கிலாந்தின் ஜேக்கப் பெத்தேல் சதம் அடிக்கவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் மிகவும் திறமையானவர் அவருடைய நுட்பம் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் காயம் அவருக்கு பிரச்சனையாக இருக்கிறது. இதே போல கேமரூன் கிரீனுக்கும் பிரச்சனை இருக்கிறது. எனவே நான் இந்தியாவின் ஜெய்ஸ்வால் கில், இங்கிலாந்தின் ஹாரி புரூக் மற்றும் நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்தரா ஆகியோரை தேர்ந்தெடுப்பேன். ஐந்தாவது இடத்தில் இங்கிலாந்தின் ஜேக்கப் பெத்தேலை வைப்பேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by