ஐபிஎல் ஒன்றாக ஆடிய போது.. இந்த டெக்னிக் சொல்லி தரீங்களானு விராட் கோலி கேட்டாரு – தென் ஆப்பிரிக்கா மார்க் பவுச்சர்

0
177

இந்தியாவின் மகத்தான வீரராகத் திகழ்ந்த வீராட் கோலி சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் கிரிக்கெட்டில் அவரது ஆரம்ப நாட்களில் தென் ஆப்பிரிக்க அணியின் மார்க் பவுச்சர் விராட் கோலிக்கு எப்படி உதவினார் என்பது குறித்து சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஓய்வை அறிவித்த விராட்

இந்தியனின் சாதனை மன்னன் விராட் கோலி, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் டி20 ஃபார்மெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக டெஸ்ட் ஃபார்மேட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கை 2008 ஆம் ஆண்டு அண்டர் 19 உலக கோப்பையில் இருந்து துவங்கியது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பின்னர் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக முதன் முதலில் விளையாட ஆரம்பித்தார்.

அந்த சமயத்தில் அவரோடு பணிபுரிந்த தென்னாப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சர், சச்சின் டெண்டுல்கரை விராட் கோலி எப்படி முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு செயல்பட ஆரம்பித்தார் என்பது குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார். மேலும் விராட் கோலி எவ்வளவு கடினமான உழைப்பாளி எனவும், கிரிக்கெட்டின் மீது எவ்வளவு ஆர்வம் கொண்டவர் என்பது குறித்தும் சில விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இப்படிதான் அவருக்கு உதவினேன்

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது ” நாங்கள் அந்த சமயத்தில் நடத்திய உரையாடல் எனக்கு உண்மையிலேயே நினைவு இருக்கிறது. அது விராட் கோலி நீங்கள் மிகவும் திறமையானவர், உங்களுக்கு இளமை நன்றாக இருக்கிறது என்று கூறினேன். இப்போது உங்களுக்கு முன்னால் ஐபிஎல் உள்ளது. நீங்கள் சுமார் ஒரு 20 வருடம் ஐபிஎல் கிரிக்கெட் விளையாடப் போகிறீர்கள். சச்சின் டெண்டுல்கர் மிகச் சிறிய வயதில்தான் தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார். அடுத்த சச்சின் டெண்டுல்கராக நீங்கள் இருக்க முடியாது என்று யார் சொல்வது? ஆனால் விராட் கோலி இவ்வளவு தூரம் இழுத்துச் சென்று தனது சொந்த வரலாறை உருவாக்கப் போகிறார் என்று அப்போது தெரியாது.

இதையும் படிங்க:விராட் கோலியின் 4ம் இடத்திற்கு அந்த 33 வயது வீரர்தான் தகுதியான நபர்.. அவர்தான் வரணும் – அனில் கும்ப்ளே பேட்டி

அந்த குறிப்பிட்ட காலத்தில் அவரது வளர்ச்சிக்கு நான் உதவு முயற்சித்தேன். அந்த சமயத்தில் அவரது விளையாட்டில் அவருக்கு எல்லாமே இருந்தது. அப்போது நாங்கள் பேசிய ஒரே விஷயம் ஷாட் பால் மற்றும் ஷாட் பந்துகளை எப்படி விளையாடுவது என்பது குறித்து தான் நினைக்கிறேன். அப்போது விராட் கோலி என்னிடம், நீங்கள் எனக்கு உதவ முடியுமா? என்று கேட்டார். நான் அப்போது நிச்சயமாக உதவ முடியும் என்று கூறினேன். அந்த சமயத்தில் நான் அவருக்கு இரண்டு டென்னிஸ் பந்துகளை வழங்கினேன். இரண்டு சிறிய நுட்பங்கள் குறித்து விவாதித்தேன். ஷாட் பந்துகள் குறித்த டெக்னிக்குகளை விராட் கோலிக்கு சிறிது சிறிதாக வழங்க முயற்சித்தேன். ஏனென்றால் நீங்கள் தென்னாபிரிக்காவில் இருந்து வரும் போது நிறைய சோதிக்கப்படுவீர்கள்” என்று அவர் கூறியிருக்கிறார்.

- Advertisement -