தற்போது சிஎஸ்கே அணியில் இருந்து தோனி ஓய்வு பெற வேண்டும் என சிலர் பேசி வருகிறார்கள். இதுகுறித்து முன்னாள் சிஎஸ்கே வீரரும் தற்போது கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் இங்கிலாந்து முன்னாள் வீரர் மொயின் அலி தனது கருத்தை கூறி இருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் ஒட்டுமொத்தமாகவே சிஎஸ்கே அணி தடுமாறி வருகிறது. இதில் தோனி ஓரளவுக்கு சுமாராகவே விளையாடுகிறார். இருந்தபோதிலும் டெல்லி அணிக்கு எதிராக அவர் மிகவும் பொறுமையாக விளையாடியது ரசிகர்களை சோதித்திருக்கிறது. இதன் காரணமாக சொந்த அணி ரசிகர்களே அவர் ஓய்வு பெற வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.
சிஎஸ்கே அணியில் நடந்த பிரச்சனை
சிஎஸ்கே அணியில் தற்போது ஸ்பின்னர்களாக ரவீந்திர ஜடேஜா மற்றும் நூர் அகமதுவின் தேவை மட்டுமே இருக்கிறது. ஆனால் மூன்றாவது ஸ்பின்னர் ஒருவருக்கு அதாவது ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு 10 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது ஐபிஎல் தொடரில் எந்த அணி நிர்வாகமும் செய்ய துணியாத காரியமாகும்.
இந்த வகையில் சிஎஸ்கே அணி நிர்வாகமும் ஏலத்தில் ரவிச்சந்திரன் அஸ்வினை வாங்க விரும்பிய தோனியின் முடிவும் அந்த அணிக்கு மிகப்பெரிய பிரச்சனையை உருவாக்கி இருக்கிறது. இதன் காரணமாக சிஎஸ்கே அணிக்கு சில நல்ல பவர் ஹி ட்டிங் பேட்ஸ்மேன்களை வாங்க முடியாமல் போய்விட்டது. தற்பொழுது இதுதான் அவர்களுக்கு பிரச்சினையாக மாறி இருக்கிறது.
தோனி பற்றி அப்படி சொல்லாதீர்கள்
இதுகுறித்து மொயின் அலி பேசும் பொழுது “இப்போது தோனியை விட சிறந்த கீப்பர்கள் யாராவது இருக்கிறார்களா? இப்பொழுதும் அவர் சிறப்பாக விளையாடி வருகிறார். தற்போது சிஎஸ்கே அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் அவரும் ஒருவராக இருக்கிறார். நான் சிஎஸ்கே அணியில் விளையாடிய பொழுதும் அவர் அந்த அணியின் சிறந்த பேட்ஸ்மேனாக இருந்தார். தற்போது சிஎஸ்கே நன்றாக செயல்படாத பொழுது, தோனி உடைய இடத்தில் வேறு யாராவது வர வேண்டும் என்கிறார்கள். ஒரு அணி தோற்கும் பொழுது இப்படித்தான் நடக்கும்”
இதையும் படிங்க : சிஎஸ்கேவ ஜெயிச்சிருந்தாலும்.. ஸ்ரேயாஸ் கேப்டன்சி சரியில்ல.. இது பெரிய தப்பு – வாசிம் ஜாபர் விமர்சனம்
“நாம் தொடர்ந்து விளையாட வேண்டுமா என்பது சுயநலமான ஒன்றாக இருக்கக் கூடாது. நாம் எடுக்கக்கூடிய முடிவு எதார்த்தங்களின் அடிப்படையில் நியாயமானதாக இருக்க வேண்டும். அணிக்கு நம்மால் அதிகம் கொடுக்க முடிந்தால் நாம் விளையாடுவதில் பிரச்சனை இல்லை. அணி புதிய திசையில் செல்ல விரும்பும் பொழுது நாம் அதற்கு அனுமதிக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.






