இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியில் விராட் கோலியின் அந்தஸ்தை உணர்ந்து அவரிடம் பயனுள்ள விஷயங்களை மட்டுமே தான் பேசியதாக ஜிதேஷ் சர்மா கூறியிருக்கிறார்.
இந்த ஆண்டு தினேஷ் கார்த்திக் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய விக்கெட் கீப்பிங் பினிஷிங் பேட்ஸ்மேன் ஜிதேஷ் சர்மாவை ஏலத்தில் குறிவைத்து ஆர்சிபி அணிக்காக வாங்கினார். மிக முக்கியமான போட்டிகளில் சிறப்பாக விளையாடி ஆர்சிபி அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
விராட்டின் அந்தஸ்து தெரியும்
இதுகுறித்து ஜிதேஷ் சர்மா பேசும்பொழுது “நான் ஒரு சிறிய நகரத்தில் இருந்து வருகிறேன். அங்கு மூத்தவர்களுக்கு மரியாதை கொடுப்பது வழக்கம். நீங்கள் மூத்தவர்களின் தனிப்பட்ட விஷயங்களை தலையிடுவதில்லை. எனக்கு விராட் கோலியின் அந்தஸ்து தெரியும். அவர் மிகப்பெரியவர். அவரின் தனிப்பட்ட விஷயத்தில் தலையிடவோ, தேவையில்லாமல் அவரை தொந்தரவு செய்யவும் நான் முயற்சி செய்யவில்லை”
“நான் அவரிடம் கிரிக்கெட் பற்றி மட்டுமே பேசினேன். மரியாதை நிமித்தமாக நான் அவரிடமிருந்து தூரத்தை வைத்திருந்தேன். அவருடன் நான் அர்த்தமுள்ள உரையாடலை மட்டுமே நடத்த விரும்பினேன்”
அவர்தான் என்னை மாற்றினார்
“மக்கள் எப்பொழுதும் என்னுடைய குறை என்னவென்று மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் தினேஷ் கார்த்திக் என்னுடைய பலத்தில் வேலை செய்து எனக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினார். ஒரு பெரிய வித்தியாசத்தை இது ஏற்படுத்தியது. அவர் எனக்கு கொடுத்த நம்பிக்கையை நான் 100% திருப்பி கொடுக்க நினைத்தேன்”
இதையும் படிங்க : மீண்டும் இந்திய கிரிக்கெட்டில் நுழையும் ராகுல் டிராவிட்.. அதிரடியாக அரங்கேறும் சம்பவம் – வெளியான தகவல்கள்
“அவர் எனக்கு மூத்த சகோதரர் போல. நான் அவரை மிகத் தாமதமாக தான் கண்டுபிடித்தேன். நான் அவரிடம் வந்து சேர்ந்து விட்டதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் என்ன சொன்னாலும் நான் எந்த கேள்வியும் இல்லாமல் அதை பின்பற்றுவேன்” என்று கூறி இருக்கிறார்.






