தற்போது யுஏஇ-ல் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
ஆசிய நாடுகளைச் சேர்ந்த எட்டு அணிகளை கொண்டு 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஆசியக் கோப்பை தொடர் யுஏஇல் நடைபெறுகிறது. இதில் இந்திய அணி தன்னுடைய பிரிவில் பாகிஸ்தான் அணியிடம் தோற்று, ஜப்பான் மற்றும் யுஏஇ அணிகளை வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
இலங்கை அணிக்கு எதிரான மோதல்
இன்று முதல் அரை இறுதி போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இலங்கை அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் துல்னித் சிகாரா 2, புலிந்து பெரேரா 6 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.
இதைத் தொடர்ந்து இலங்கை அணிக்கு அபேசிங்கே 110 பந்தில் 69 ரன்கள், சருஜன் 78 பந்தில் 42 ரன்கள் எடுத்தார்கள். அந்த அணி 46.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 176 ரன்கள் மட்டும் எடுத்தது. இந்திய அணியின் பந்துவீச்சில் சேட்டன் சர்மா 3, கிரண் குரோமோல் மற்றும் ஆயுஸ் மத்ரே தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.
13 வயது சூரியவன்சி அதிரடி
இதற்கு அடுத்து களம் இறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் மத்ரே அதிரடியாக 28 பந்தில் 34 ரன்கள் எடுத்தார். இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் 13 வயது சூரியவன்சி 36 பந்துகளில் ஆறு பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்கள் உடன் 67 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இதையும் படிங்க : ரிஷப் பண்ட்தான் என்னோட பெரிய எதிரி.. அதுக்கு முக்கிய காரணம் இதுதான் – ஜஸ்டின் லாங்கர் பேச்சு
இதைத்தொடர்ந்து இந்திய அணிக்கு ஆன்ட்ரே சித்தார்த் 27 பந்தில் 22 ரன்கள், முகமத் அமான் 26 பந்தில் 25 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணி 21.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது.