கிரிக்கெட் உலகில் பெரிய தொடர்களின் பெரிய போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்படக்கூடிய சில வீரர்களில் ஆஸ்திரேலியா அணியின் இடது கை வேகப் பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் முக்கியமானவர். இந்த நிலையில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் அவர் வீசிய சிறந்த பந்து எதுவென்று கூறியிருக்கிறார்.
மிட்சல் ஸ்டார் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சத்தில் இருந்த காலகட்டம் 2015 என்று கூறலாம். வேகம், துல்லியம் மற்றும் ஸ்விங் என பேட்ஸ்மேன்கள் விரும்பாத ஒரு பந்துவீச்சாளராக அவர் உலகக் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தினார். அதற்குப் பிறகும் அணியில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்கின்ற இடத்தில் தன்னுடைய பங்குக்கு குறைவில்லாமல் தாக்கத்தை உண்டாக்கக் கூடியவராக இப்போது வரையில் இருந்து வருகிறார்.
மேலும் தொடர்ந்து பல வருடங்களாக ஆஸ்திரேலியா அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என ஐபிஎல் தொடரை புறக்கணிப்பு வந்தார். பெரிய அளவில் அவருக்கு டிமாண்ட் இருந்த போதும் கூட, பெரிய வருமானம் கிடைக்கும் என்கின்ற உத்தரவாதம் இருந்தும் கூட அவர் ஐபிஎல் தொடருக்கு நாட்டு அணிக்காக வரவில்லை.
இந்த நிலையில் ஓய்வு பெறுவதற்கான காலம் நெருங்கி விட்டதால் இந்த வருடம் ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் கலந்து ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச சம்பளமாக 24.75 கோடி ரூபாய் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்று வாங்கியிருக்கிறார். மொத்தமாக 14 போட்டிகளில் 17 விக்கெட்டுகள் எடுத்தார். ஆரம்பத்தில் சரியாக இல்லை என்றாலும் பிளே ஆப் மற்றும் பைனலில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி கொல்கத்தா அணி சாம்பியனாக உதவினார்.
இந்த நிலையில் இந்த வருட ஐபிஎல் பைனலில் அபிஷேக் சர்மாவை கிளீன் போல்ட் செய்த பந்து தான் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த பந்தா? என்கின்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. அந்தக் குறிப்பிட்ட பந்தை எந்த இடது கை பேட்ஸ்மேன் விளையாடி இருந்தாலும் ஆட்டம் இழந்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:254 ரன்.. யுவராஜ் கம்பேக்கில் ஆஸிக்கு இன்னொரு ரிவென்ச்.. பைனலில் இந்தியா பாகிஸ்தான்.. உலக லெஜன்ட்ஸ் தொடர்
இதற்கு பதில் அளித்த மிட்சல் ஸ்டார்க் “2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டியில், நியூசிலாந்து பிரண்டன் மெக்கலமை கிளீன் போல்ட் செய்த பந்துக்கு அடுத்து, அபிஷேக் ஷர்மாவை அவுட் செய்த பந்து இருக்கும் என்று நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார். அபிஷேக் ஷர்மாவை கிளீன் போல்ட் செய்த பந்துக்கு தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையின் சிறந்த இரண்டாவது பந்துக்கான இடத்தைக் கொடுத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.