நடப்பு 9வது டி20 உலகக் கோப்பை தொடர் சூப்பர் 8 சுற்றை எட்டி இருக்கிறது. இந்தச் சுற்றில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் ஒரே பிரிவில் வருகின்றன. எனவே இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத இருக்கின்றன. தற்பொழுது இப்படியான அட்டவணையை முன்கூட்டியே உருவாக்கியதற்காக ஆஸ்திரேலியா அணியின் மிட்சல் ஸ்டார்க் விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்த டி20 உலக கோப்பை தொடரில் மொத்தம் பங்கு பெற்ற 20 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து அணிகள் இடம் பெற்றன. ஒவ்வொரு குழுவில் இடம் பெற்ற ஐந்து அணிகளிலும் முதல் இரண்டு அணிகளாக இரண்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு இருந்தன.
இந்தியா இடம் பெற்றிருந்த ஏ குழுவில் இந்திய அணி முதல் அணியாகவும் பாகிஸ்தான் அணி இரண்டாவது அணியாகவும் தேர்வு செய்யப்பட்டிருந்தது. இதே போல பி பிரிவில் இங்கிலாந்து முதல் அணியாகவும் ஆஸ்திரேலியா இரண்டாவது அணியாகவும் தேர்வு செய்யப்பட்டிருந்தது.
அடுத்த இரண்டு பிரிவுகளில் சி பிரிவில் நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ், கடைசி டி பிரிவில் தென் ஆப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகள் முதல் இரண்டு அணிகளாக இடம் பெற்று இருந்தன. இந்த நிலையில் சி பிரிவில் முதலிடம் கொடுக்கப்பட்டிருந்த நியூசிலாந்து அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாததால், அந்த இடத்தை தகுதி பெற்ற ஆப்கானிஸ்தானுக்கு கொடுக்கப்பட்டது. ஆப்கானிஸ்தான் சி பிரிவில் முதல் அணியாக மாறியது. வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்ட இரண்டாம் இடமே தொடர்கிறது.
ஏற்கனவே கொடுக்கப்பட்டதின் அடிப்படையில் ஏ பிரிவில் முதல் அணி இந்தியா, பி பிரிவில் இரண்டாம் அணி ஆஸ்திரேலியா, சி பிரிவில் முதல் அணி ஆப்கானிஸ்தான், டி பிரிவில் இரண்டாம் அணி பங்களாதேஷ் என நான்கு அணிகளும் சூப்பர் 8 சுற்றில் ஒரே பிரிவில் வந்துள்ளன. அதே சமயத்தில் பி பிரிவில் ஆஸ்திரேலியா நான்கு போட்டிகளையும் வென்று புள்ளிகள் அடிப்படையில் முதலிடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சூப்பர் எட்டு சுற்றுக்கு புள்ளிகளின் அடிப்படையில் அணிகள் பிரிக்கப்படவில்லை. ஏற்கனவே முடிவு செய்யப்பட்டபடி பிரிக்கப்பட்டிருக்கின்றன.
இதையும் படிங்க : 4 ஓவர்.. 4ம் மெய்டன்.. 0 ரன்.. டி20 கிரிக்கெட்டில் பெர்குசன் உலக சாதனை.. நியூசிலாந்துக்கு ஆறுதல் ஆட்டம்
இதுகுறித்து விமர்சனம் செய்திருக்கும் மிட்சல் ஸ்டார்க் பேசும் பொழுது “முன்கூட்டியே இப்படி எந்த அணிகளுடன் யார் மோத வேண்டும் என்று தீர்மானிப்பதை குறித்து கேள்வி கேட்க வேண்டும் என்று நான் கட்டாயம் நினைக்கிறேன். நான் இந்த முறைக்கு ரசிகன் கிடையாது” என்று கூறியிருக்கிறார்.