இந்தியா ஒரே இடத்தில் ஆடியது தப்பு.. கம்மின்ஸ் கருத்துக்கு ஸ்டார்க் எதிர்ப்பு.. பரபர சம்பவம்

0
579
Starc

2025 நடந்து முடிந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி துபாயில் ஒரே மைதானத்தில் விளையாடியதால் எந்த நன்மையும் இல்லை என ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் கருத்துக்கு எதிர்ப்பாக மிட்சல் ஸ்டார்க் பேசியிருக்கிறார்.

தற்போது தொடர் முடிவடைந்த நிலையிலும் இந்திய அணி ஒரே மைதானத்தில் விளையாடியது தொடர்பாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் இதை ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் முதல் முதலில் ஆரம்பித்து வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பேட் கம்மின்ஸ் தெரிவித்த கருத்து

ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் இந்த தொடரில் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. ஸ்மித் கேப்டனாக பொறுப்பேற்று அணியை அரை இறுதிக்கு வழி நடத்தி வந்தார். அரை இறுதியில் இந்திய அணி இடம் தோற்று ஆஸ்திரேலியா அணி வெளியேறியது. அதே சமயத்தில் ஆஸ்திரேலியா வீரர்கள் யாரும் இந்திய அணி ஒரே இடத்தில் விளையாடுவது தொடர்பாக புகார் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் இந்திய அணி தனது முதல் இரண்டு போட்டிகளை வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்ற பொழுது ஆஸ்திரேலியா பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பேட் கம்மின்ஸ் இந்திய அணி ஒரே மைதானத்தில் விளையாடுவது அவர்களுக்கு அதிக சாதகத்தை தரும், மற்ற அணிகளுக்கு இது பின்னடைவை உருவாக்கும் என்று முதன் முதலில் பேசியிருந்தார். இதைத் தொடர்ந்து மற்றவர்களும் பேச ஆரம்பித்தார்கள்.

- Advertisement -

மிட்சல் ஸ்டார்க் மாற்று கருத்து

இதுகுறித்து மிட்சல் ஸ்டார்க் பேசும் பொழுது ” ஒரே மைதானத்தில் விளையாடுவது கிரிக்கெட் வீரர்களுக்கு நன்மையாக இருக்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாட முடியும். அவர்கள் வேறு எந்த லீக்குகளிலும் விளையாடுவது கிடையாது. ஆனால் மற்ற அணிகளில் நான்கு, ஐந்து இடங்களில் லீக்குகள் விளையாடும் வீரர்கள் இருக்கிறார்கள். இவர்கள் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் பெரிய எக்ஸ்போஸர்ளாகவும் இருக்கிறார்கள்”

இதையும் படிங்க : 2025 ஐபிஎல்.. டெல்லி கேப்பிடல்ஸ்க்கு யாரும் எதிர்பார்க்காத கேப்டன்.. ரசிகர்கள் விமர்சனம்

“இந்திய அணி சிறப்பான முறையில் கிரிக்கெட் விளையாடும் ஒரு அணியாக இருந்து வருகிறது. அவர்களுடைய ரசிகர்கள் இந்திய அணியை தலைசிறந்த அணி என்று சொல்வார்கள். ஆனால் ஆஸ்திரேலியா அணி ரசிகர்கள் இந்திய அணி ரசிகர்களின் கருத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -