2025 ஐபிஎல்.. டெல்லி கேப்பிடல்ஸ்க்கு யாரும் எதிர்பார்க்காத கேப்டன்.. ரசிகர்கள் விமர்சனம்

0
155
DC

இந்த ஆண்டு 18 ஆவது ஐபிஎல் சீசனுக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் புதிய கேப்டன் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகத்தின் இந்த முடிவை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் மார்ச் 22ஆம் தேதி ஆரம்பிக்கிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மோதிக்கொள்ள இருக்கின்றன.

- Advertisement -

பல பேர் போட்டியிடும் கேப்டன் பொறுப்பு

தற்போது டெல்லி அணியை எடுத்துக் கொண்டால் கேஎல்.ராகுல் மெகா ஏலத்தில் வாங்கப்பட்டு இருக்கிறார். இவர் இந்திய அணிக்கும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் மற்றும் லக்னோ அணிகளுக்கும் கேப்டனாக இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இவரை மீண்டும் கேப்டனாக கொண்டுவரப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் மற்றும் கடந்த சீசனில் பெங்களூரு அணிக்கு ஐபிஎல் தொடரில் கேப்டனாக இருந்த பாப் டு பிளேசிஸ் தற்போது டெல்லி அணியில் இருக்கின்ற காரணத்தினால் இவரையும் புதிய கேப்டனாக கொண்டுவரப்படலாம் என்று கருதப்பட்டது.

- Advertisement -

டெல்லி அணி நிர்வாகத்தின் வித்தியாச முடிவு

இந்த நிலையில் 31 வயதான அக்சர் படேலை புதிய கேப்டனாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகம் அறிவித்திருக்கிறது. இவர் 2019 ஆம் ஆண்டு முதல் இந்த அணிக்காக தொடர்ந்து 6 ஆண்டுகளாக விளையாடிக் கொண்டு வருகிறார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அனுக்காத அதிக வருடங்கள் விளையாடிய வீரராகவும் இருக்கிறார்.

இதையும் படிங்க : 196.67 ஸ்ட்ரைக் ரேட்.. 7 சிக்ஸ்.. விண்டேஜ் யுவராஜ் அதிரடி.. ஆஸி அணியை வீழ்த்தி இந்தியா பைனலுக்கு தகுதி.. IML 2025

2019 ஆம் ஆண்டு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்குள் வந்த அக்சர் படேல் 82 போட்டிகளில் 967 ரன்கள், மேலும் 7.09 எக்கனாமி உடன் 62 விக்கட்டுகள் கைப்பற்றி ஆல்ரவுண்டராக அந்த அணிக்கு ஜொலித்திருக்கிறார். இதன் காரணமாக தற்போது புதிய கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் சமூக வலைதளத்தில் கேஎல்.ராகுலுக்கு கேப்டன் பதவி கொடுத்திருக்க வேண்டும் என ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்!

- Advertisement -