சாம்சனின் இந்த நிலைமைக்கு காரணம் இந்த ரெண்டு பேர்தான்.. இதையும் நாம பேசணும் – இர்பான் பதான் பேச்சு

0
8
Irfan

தற்போது சஞ்சு சாம்சன் பேட்டிங் ஃபார்ம் இல்லாமல் இருப்பதற்கு இந்திய தேர்வு குழுவும் ஒரு காரணம் என இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் விமர்சனம் செய்திருக்கிறார்.

நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற முடிந்திருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சஞ்சு சாம்சன் ஒரு போட்டியில் கூட 30 ரன்கள் தொடவில்லை. மேலும் அவர் ஆட்டம் இருக்கும் வரை மிகவும் கவலை அளிப்பதாக இருக்கிறது.

- Advertisement -

மூன்று சதங்களுக்கு முன்னுரிமை இல்லை

கடந்த வருடத்தில் சஞ்சு சாம்சனை இந்திய டி20 அணியின் தொடக்க ஆட்டக்காரராக பயிற்சியாளர் கம்பீர் மற்றும் தேர்வுக் குழு தலைவர் அகர்கர் இருவரும் கொண்டு வந்தார்கள். அவரும் அந்த வாய்ப்பை பயன்படுத்தி மொத்தம் மூன்று சதங்கள் அடித்தார். எனவே அவருக்கு தொடர்ந்து துவக்க வீரராக வாய்ப்பு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் திடீரென கில்லை கொண்டுவந்து துணை கேப்டன் பொறுப்பை கொடுத்து துவக்க ஆட்டக்காரராகவும் மாற்றினார்கள். சஞ்சு சாம்சனை மிடில் வரிசைக்கு அனுப்பினார்கள். அங்கிருந்து அவரது ஆட்டம் மிகவும் மோசமான முறைக்கு மாறியது. தற்போது அவருக்கு இந்திய பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காத அளவுக்கு சூழல் உருவாகியுள்ளது.

- Advertisement -

இவர்களையும் சொல்ல வேண்டும்

இதுகுறித்து இர்பான் பதான் பேசும் பொழுது “சஞ்சு சாம்சனை பொறுத்த வரை அவர் ரன்கள் எடுக்க சிரமப்படுகிறார். முதலாவதாக அவர் சரியான இடத்தில் இல்லை அடுத்து தொழில்நுட்பக் கோளாறு இப்படியான பிரச்சினைகளால்தான் ஒரு பேட்ஸ்மேன் பாதிக்கப்படுவார். ஆனால் சாம்சன் நல்ல முறையில் இருந்த பொழுது மூன்று சதங்கள் அடித்து இருக்கிறார் என்பதை நாம் மறந்து விடக்கூடாது”

இதையும் படிங்க: இஷான் முதல்ல போறார் பின்னாடி தான் எல்லாரும் போறாங்க.. அது அடி இல்ல ஸ்டேட்மென்ட் – அஸ்வின் பாராட்டு

“இப்படி அவர் தொடக்க இடத்தில் மிகவும் வசதியாகவும் சிறப்பாகவும் விளையாடிக் கொண்டிருந்த பொழுது வேறு ஒரு வீரரை கொண்டு வந்து அவரை கீழே போய் விளையாட சொன்னார்கள். இஷான் கிஷானை அணிக்கு கொண்டு வந்ததற்காக நாம் தேர்வுக் குழுவை பாராட்டினோம். ஆனால் சஞ்சுவின் நிலைமைக்கு காரணமும் இவர்கள்தான். நாம் இதையும் சொல்ல வேண்டும்” என்று கூடியிருக்கிறார்.

- Advertisement -