இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான டிக்கெட் விற்பனை உயர்வுக்கு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா விளையாட இருப்பதே காரணம் என ஆஸ்திரேலிய கேப்டன் மிச்சல் மார்ஸ் கூறியிருக்கிறார்.
இரு அணிகளுக்கும் இடையே நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நாளை அதிவேக பெர்த் மைதானத்தில் துவங்க இருக்கிறது. இந்திய ஒரு நாள் அணிக்கு கில் முதல் முறையாக கேப்டன் பொறுப்பை செய்ய இருக்கிறார்.
வெள்ளைப் பந்து கிரிக்கெட்டின் இரண்டு மிகப்பெரிய ஜாம்பவான் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் ஆஸ்திரேலியா மண்ணில் விளையாட இருப்பது இதுவே கடைசி முறையாக இருக்கும். தொடர்ந்து இருவரும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவார்களா? என்பது உத்திரவாதம் இல்லாததாக இருக்கிறது.
இதன் காரணமாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் ரசிகர்கள் இந்த ஒருநாள் தொடரை பார்ப்பதற்கு அதிக அளவில் விருப்பம் காட்டி வருகிறார்கள். இதன் காரணமாக இந்த ஒருநாள் தொடருக்கு டிக்கெட் விற்பனை மிகவும் அமோகமாக இருந்து வருகிறது. மேலும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் ரசிகர்களுக்கு விராட் கோலி மிகவும் பிடித்தமான வீரர் என்பதாலும் தொடருக்கு நிறைய எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கிறது.
இது குறித்து ஆஸ்திரேலியா கேப்டன் மிட்சல் மார்ஸ் பேசும்பொழுது “நான் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி உடன் நிறைய கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். அவர்கள் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் நிச்சயமாக லெஜன்ட் வீரர்கள். மேலும் ரன்னை துரத்தும் பொழுது விராட் கோலி மிகவும் சிறப்பான சாம்பியன் வீரர். இதன் காரணமாகத்தான் தற்பொழுது டிக்கெட் விற்பனை மிகவும் அமோகமாக இருக்கிறது. ரசிகர்கள் இதன் காரணமாகத்தான் விரும்புகிறார்கள்”
இதையும் படிங்க : இந்தியா ஆஸ்திரேலிய முதல் ODI போட்டி.. திடீரென குட்டையை குழப்பிய ஸ்ரீகாந்த் – என்ன நடந்தது?
“இந்த ஒருநாள் தொடர் இருவருக்கும் ஆஸ்திரேலியாவில் கடைசி தொடராக இருக்கும். அதை அவர்கள் இதை ரசித்து விளையாட வேண்டும். மேலும் இவர்கள் இருவரும் இணைந்து ஆஸ்திரேலியா மண்ணில் விளையாடுவதை மக்கள் பார்ப்பார்கள். அதே சமயத்தில் இருவரும் சிறப்பாக விளையாடுவதை மக்கள் பார்க்க முடியாது” என்று இருவரையும் சிறப்பாக விளையாட விட மாட்டோம் என்பதை மறைமுகமாக கூறியிருக்கிறார்.