ஜெய்ஸ்வால் எங்கள ஸ்லெட்ஜ் பண்ற அளவுக்கு ஆயிடுச்சு.. 2வது டெஸ்டில் பழைய மாதிரி செய்யணும் – மிட்சல் ஜான்சன் கருத்து

0
882
Johnson

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்களை ஜெய்ஸ்வால் வம்புகளுக்கும் அளவிற்கு போய்விட்டது எனவும் இதற்கு திருப்பி ஆஸ்திரேலியா வீரர்கள் இரண்டாவது டெஸ்டில் பதிலடி கொடுக்க வேண்டும் எனவும் மிட்சல் ஜான்சன் கூறியிருக்கிறார்.

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் களத்தில் மிகவும் சிறப்பாக செயல்பட்டதோடு, கொஞ்சம் ஆக்ரோஷமாகவும் செயல்பட்டார்கள். அதே சமயத்தில் வழக்கமாக ஆக்ரோஷமாக செயல்படும் ஆஸ்திரேலியா வீரர்கள் அமைதியாகவும் சில நேரங்களில் சிரித்தபடியும் இருந்தார்கள். இப்படி இருந்திருக்கக் கூடாது என மிட்சல் ஜான்சன் ஏமாற்றம் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

ஹர்ஷித் ராணா – ஜெய்ஸ்வால்

இந்திய அணி பந்து வீசும் போது ஹர்ஷித் ராணா டிராவிஸ் ஹெட்டிடம் நல்ல பந்துகளை விளையாட மாட்டாயா என்று கேட்டு வம்பு இழுத்தார். அதற்கு ஏற்கனவே உலகக்கோப்பை வரை தான் இந்திய அணியிடம் அதிரடியாக விளையாடி இருப்பதாக ஹெட் திருப்பி பதில் கொடுத்திருந்தார்.

இதற்கு முன்பாக இந்திய அணி பேட்டிங் செய்யும்பொழுது ஆஸ்திரேலியா அணியில் வேகமாக பந்து வீசக்கூடிய ஸ்டார்க்கை பார்த்து உங்களுடைய பந்து மெதுவாக வருகிறது வேகமாக வீசுங்கள் என ஜெய்ஸ்வால் கூறினார். வழக்கமாக ஆஸ்திரேலிய வீரர்கள்தான் எந்த நாட்டிற்கு சென்றாலும் எதிரணி வீரர்களிடம் வம்புக்கு செல்வார்கள். இந்த முறை இது அப்படியே வித்தியாசமாக நடந்திருக்கிறது.

- Advertisement -

இரண்டாவது டெஸ்டில் திரும்ப வேண்டும்

இதுகுறித்து மிட்சல் ஜான்சன் கூறும் பொழுது ” வெளி ஒரு நபராக, இந்த ஆஸ்திரேலியா தரப்பில் சில சண்டைகளை பார்க்க விரும்புகிறேன். ஒரு அறிமுகவீரர் இந்தியாவை சேர்ந்த இளம் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால்,எங்களது சொந்த மைதானத்தில் ஸ்டார்க்கை எதிர்கொண்டு ஸ்லெட்ஜிங் செய்கிறார். ஆனால் பேட்டிங்கில் மற்றும் கள செயல்பாடுகளில் எந்தவிதமான ஆக்ரோஷத்தையும் பார்க்க முடியவில்லை”

இதையும் படிங்க : 8 விக்கெட்.. ஆர்சிபி வீரர் அதிரடி.. இங்கிலாந்து நியூஸி அணியை வென்றது.. WTC பைனல் வாய்ப்பு முடிந்தது

“பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இன்னும் நிறைய தூரத்தில் இருக்கிறது. இது நிச்சயமாக ஆஸ்திரேலியா அணி பீதி அடைய வேண்டிய நேரம் கிடையாது. ஆனால் வெள்ளிக்கிழமை அடிலெய்ட் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்கும் பொழுது ஆஸ்திரேலியா அணி இந்திய அணியின் மீது அழுத்தம் கொடுத்து ஆதிக்கம் செலுத்த வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -