8 விக்கெட்.. ஆர்சிபி வீரர் அதிரடி.. இங்கிலாந்து நியூஸி அணியை வென்றது.. WTC பைனல் வாய்ப்பு முடிந்தது

0
503
England

இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் நியூசிலாந்து அணியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பு முடிவுக்கு வந்தது.

இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசியது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 348 ரன்கள் எடுத்தது. கேன் வில்லியம்சன் 93 ரன்கள் எடுத்தார். பிரைடன் கார்ஸ் சோயப் பஷீர் தலா 4 விக்கெட் எடுத்தார்கள்.

- Advertisement -

ஹாரி புரூக் மெகா சதம்

இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 499 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு ஹாரி குரூக் 171 ரன்கள் எடுத்தார்.கேப்டன் ஸ்டோக்ஸ் 80 ரன் மற்றும் துணை கேப்டன் ஒல்லி போப் 77 ரன்கள் எடுத்தார்கள். மேட் ஹென்றி நான்கு விக்கெட் வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி 74.1 ஓவரில் 254 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. கேன் வில்லியம்சன் 61, டேரில் மிட்சல் 84 ரன்கள் எடுத்தார்கள். இங்கிலாந்து தரப்பில் சிறப்பாக பந்து வீசிய பிரைடன் கார்ஸ் ஆறு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

- Advertisement -

பைனல் வாய்ப்பை இழந்த நியூசிலாந்து

இதற்கடுத்து குறைந்த இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணிக்கு ஆர் சி பி காக இந்த வருடம் வாங்கப்பட்ட இளம் வீரர் ஜேக்கப் பெத்தேல் ஆட்டம் இழக்காமல் அதிரடியாக 37 பந்தில் 50 ரன், ஜோ ரூட் 15 பந்தில் 23 ரன் எடுக்க, இரண்டு விக்கெட் களை மட்டும் இரண்டு இலக்கை எட்டி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இதையும் படிங்க : சச்சின் கோலி இல்லை.. எனது அடையாளம் இந்த ஜாம்பவான்தான்.. ஐபிஎல்லில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய 13 வயது வீரர்

நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்கின்ற சூழ்நிலை இருந்தது. தற்போது முதல் டெஸ்டில் தோல்வி அடைந்திருப்பதால் பைனல் வாய்ப்பை இழந்துவிட்டது.

- Advertisement -