ஷமி சிராஜ் சொல்றது கட்டுக்கதை.. வெள்ளை பந்துல இதெல்லாம் நடக்கவே நடக்காது – ஸ்டார்க் வெளிப்படை பேச்சு

0
66
Starc

நடப்பு ஐபிஎல் தொடரில் பிசிசிஐ மாற்றி இருக்கும் ஒரு விதியால் எந்தவித பயணம் கிடையாது எனவும், அது குறித்து இந்திய பவுலர்கள் சமி மற்றும் சிராஜ் சொல்வதெல்லாம் கட்டுக்கதை எனவும் டெல்லி அணிக்காக விளையாடி வரும் மிட்சல் ஸ்டார்க் கூறி இருக்கிறார்.

நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிராக டெல்லி அணி தங்களது சொந்த மைதானத்தில் விளையாடிய போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. இதில் ஆட்டத்தின் கடைசி ஓவரையும் சூப்பர் ஓவரையும் பிரமாதமாக வீசி மிட்சல் ஸ்டார்க் டெல்லி அணியை வெற்றி பெற வைத்தார். பின்பு இந்த கருத்தை கூறியிருக்கிறார்.

- Advertisement -

கோவிட்டால் மாறிய விதி

கிரிக்கெட் உலகில் கோவிட் பெரிய மாற்றங்களை உருவாக்கியது. மிகக்குறிப்பாக அந்த நேரத்தில் பந்தின் மீது பந்துவீச்சாளர்கள் எச்சில் பயன்படுத்தி பளபளப்பாக்குவதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை ஐசிசி இதுவரையில் நீக்கிக் கொள்ளவில்லை. வீரர்களின் வேர்வையை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள அனுமதி கொடுத்திருக்கிறது.

இந்த நிலையில் பிசிசிஐ இந்த ஆண்டு பந்தின் மீது மீண்டும் வீரர்கள் தங்களுடைய எச்சிலை அதாவது சலைவாவை பயன்படுத்திக் கொள்ள அனுமதி கொடுத்திருக்கிறது. இதன்மூலம் மீண்டும் கடைசி நேரத்தில் பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முடியும் என்று நம்பப்படுகிறது. இது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நன்மையை உண்டாக்கும் என்று பொதுவாக கூறப்பட்டு வருகிறது.

- Advertisement -

முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் கருத்து

இந்த நிலையில் பிசிசிஐ மீண்டும் எச்சிலை பந்தின் மீது பயன்படுத்த அனுமதி அளித்திருப்பது சிறந்த முடிவு எனவும், இதனால் கடைசி நேரத்தில் பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முடியும் எனவும், சர்வதேச போட்டிகளுக்கும் ஐசிசி மீண்டும் இந்த விதியை கொண்டு வர வேண்டும் எனவும் இருவருமே கூறியிருந்தார்கள். மேலும் முன்னாள் வீரர்கள் பிலாந்தர் மற்றும் டிம் சவுதி இருவரும் இதை வரவேற்று இருந்தார்கள்.

இதையும் படிங்க : 2025 ஐபிஎல்.. டெல்லி லீக்கின் சாதனை.. சிஎஸ்கே கையில் இருக்கும் வெண்ணை.. தோனி மனது வைப்பாரா?

இதுகுறித்து மிட்சல் ஸ்டார்க் கூறும் பொழுது “நான் சலைவாவை பயன்படுத்தவில்லை. அனேகமாக எச்சிலை பயன்படுத்தினால் ரிவர்ஸ் ஸ்விங் ஆகும் என்பது ஒரு கட்டுக்கதை என்று நினைக்கிறேன். மேலும் பந்தின் மீது பயன்படுத்தப்படும் வியர்வை மற்றும் எச்சிலுக்கு இடையே என்ன வித்தியாசம் இருக்கிறது என்று எனக்கு புரியவில்லை. இது சிவப்பு பந்தியில் வித்தியாசத்தை ஏற்படுத்தலாம் ஆனால் வெள்ளை பந்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -