நேற்று களத்தில் கான்ஸ்டாஸ் செய்த விஷயங்கள் திரும்ப அவருக்கு வரும் என மைக்கேல் ஹஸி இன்று பும்ரா கைப்பற்றிய பொழுது கூறி இருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மெல்போன் மைதானத்தில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டி உச்சகட்ட பரபரப்பை எட்டி இருக்கிறது. இன்று ஆஸ்திரேலியா எதிர்பார்க்காத அளவுக்கு வேகமாக விக்கெட்டுகளை இழந்தது போட்டியை பரபரப்பாக மாற்றி இருக்கிறது.
கான்ஸ்டாஸ் களத்தில் செய்த வேலை
ஆஸ்திரேலியா அணிக்கு இந்த டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இளம் 19 வயது தொடக்க ஆட்டக்காரர் சாம் கான்ஸ்டாஸ் பும்ரா பந்துவீச்சில் அதிரடியாக விளையாடி அனைவரது கவனத்தையும் கவர்ந்தார். பின்பு விராட் கோலி அவரது தோள் மீது இடிக்க, அந்த பிரச்சனை பெரிதாக விவாதிக்கப்பட்டு ஆஸ்திரேலிய மீடியாக்கள் விராட் கோலியை கடுமையாக விமர்சனம் செய்தன.
இதைத்தொடர்ந்து கான்ஸ்டார்ஸ் பீல்டிங் செய்யும் பொழுது ஆஸ்திரேலியா ரசிகர்களை உற்சாகப்படுத்துவதாக இந்திய வீரர்களை சீண்டினார். விராட் கோலி ஆட்டம் இழந்து வெளியேறிய பொழுதும் அதையே செய்தார். மேலும் பும்ராவை தான் தொடர்ந்து தாக்கி விளையாட போகிறேன் என்றும் கூறியிருந்தார். ஆனால் இன்று அவர் எட்டு ரன் எடுத்திருந்தபோது பும்ரா அவரை கிளீன் போல்ட் செய்து வெளியேற்றினார். மேலும் அவரைப் போலவே கொண்டாடவும் செய்தார்.
அது உங்களை திரும்ப கடிக்க வரும்
இதுகுறித்து மைக் ஹஸி கூறும் பொழுது “நீங்கள் இப்படி செய்வதெல்லாம் ஒரு கட்டத்தில் உங்களை எப்படியும் திரும்ப கடிக்க வரும். கான்ஸ்டாஸ் ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு திரும்ப வந்து, நான் ஏதாவது தவறு செய்து விட்டேனா என்று நினைப்பார் என்று நினைக்கிறேன். தற்பொழுது தற்போது இது இரு நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் தீவிரத்தை மேலும் அதிகப்படுத்தி இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க : நான் செலக்டராக இருந்தால்.. ரோஹித் சர்மா வீட்டுக்கு அனுப்பிடுவேன்.. காரணம் இதான் – மார்க் வாக் கருத்து
இது குறித்து மார்க் வாக் கூறும்பொழுது “பும்ரா இப்படி விக்கெட் எடுத்து கொண்டாடியதை நீங்கள் பலமுறை பார்த்திருக்க மாட்டீர்கள். ஆனால் கான்ஸ்டாஸ் விக்கெட் கைப்பற்றியதும் நானும் இங்கு இருக்கிறேன் என்று அவர் சொல்ல விரும்பி அதை செய்து இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.






