ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் மார்க் வாக் தான் இந்திய கிரிக்கெட் செலக்டராக இருந்தால் ரோகித் சர்மாவின் சேவைக்கு நன்றி சொல்லி அனுப்பி விடுவேன் என வெளிப்படையாக விமர்சனம் செய்திருக்கிறார்.
தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்று டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மா பும்ரா கைப்பற்றிய விக்கெட் அளவுக்கு கூட ரன்கள் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரது கேப்டன் செய்யும் மிகவும் சுமாராக இருந்து வருகிறது.
திடீரென உள்ளே வந்த விராட் கோலி
இந்த நிலையில் ரோகித் சர்மா அணியை உற்சாகமாக வழிநடத்தவில்லை என்பது வெளிப்படையாக தெரிந்த ஒன்றாக இருக்கிறது. இன்று ஆஸ்திரேலியா அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் போது விராட் கோலி அறிவிக்கப்படாத கேப்டனாக பந்துவீச்சாளர்களுடன் பேசுவது என உற்சாகமாக செயல்பட்டு கொண்டிருக்கிறார். விக்கெட்டுகளும் வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக ரோகித் சர்மா இனி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட மாட்டார் என்று பலரும் கூறி வருகிறார்கள். மேலும் இந்த டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தால் ரோகித் சர்மா இந்த போட்டியுடன் வெளியேறிவிட வேண்டும் என்றும் பலரும் கூறி வருகிறார்கள். எனவே அவர் நிறைய நெருக்கடி இருக்கிறது.
உங்கள் சேவைக்கு நன்றி
இதுகுறித்து மார்க் வாக் கூறும் பொழுது “அவர் இரண்டாவது இன்னிங்ஸில் இந்த போட்டியில் ரன்கள் எடுக்கவில்லை என்றால். நான் அவரை சிட்னி டெஸ்டுக்கு அழைத்துக் கொண்டு செல்ல மாட்டேன். இதுவரை உங்களுடைய சேவைக்கு நன்றி என அவரை நான் டிராப் செய்து விடுவேன். மேலும் நாங்கள் சிட்னிக்கு பும்ராவை கேப்டனாக கொண்டு செல்கிறோம், இது உங்கள் கிரிக்கெட் வாழ்க்கையின் முடிவு என செலெக்டராக இருந்தால் கூறி விடுவேன்”
இதையும் படிங்க : 44 போட்டி.. 200 விக்கெட்.. வரலாற்றை மாற்றி எழுதிய பும்ரா.. உலகின் முதல் வீரராக சாதனை.. முழு விபரம்
“ரோகித் சர்மாவின் கடைசி 14 இன்னிங்ஸ் சராசரி வெறும் 11 ரன்கள் மட்டுமே ஆகும். எனவே அவர் தனது சிறந்த நிலைகளை கடந்து மிகவும் சுமாராக மாறிவிட்டார் என்பது வெளிப்படையாக தெரிகிறது. இது அனைத்து வீரர்களுக்கும் நடக்கும். எந்த சிறந்த வீரரும் இதை கடக்காமல் இருக்க முடியாது” என்று கூறி இருக்கிறார்.






