இந்திய கிரிக்கெட்

தொடரின் பாதியில் வீரர்கள் நீக்கம்.. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு பைத்தியம் பிடித்து விட்டது – மிக்கி ஆர்தர் விளாசல்

​இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் நடுவே பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஏழு பிளேயர்களை சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பிய முடிவை முன்னாள் கோச் மிக்கி ஆர்தர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

- Advertisement -

​இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் டீம் மிகவும் மோசமான தோல்வியை சந்தித்தது. இந்த மோசமான பெர்ஃபார்மன்ஸ் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அதிரடி முடிவுகளை எடுத்தது.

​முகமது ரிஸ்வான், இமாம் உல் ஹக் உள்ளிட்ட ஏழு முக்கிய பிளேயர்களை உடனடியாக நாடு திரும்ப உத்தரவிட்ட போர்டு, டெஸ்ட் கோச் சர்பராஸ் அகமதுவையும் அந்த பதவியிலிருந்து அதிரடியாக நீக்கி நடவடிக்கை எடுத்தது.

​தொடரின் நடுவே இதுபோன்ற முடிவுகளை எடுப்பது டீமின் ஸ்டெபிலிட்டியை பாதிக்கும் என்றும், தொடர்ந்து பிளேயர்களையும் கோச்சுகளையும் மாற்றுவது தான் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு காரணம் என்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

​இதுகுறித்து பாகிஸ்தான் டீமின் முன்னாள் கோச் மிக்கி ஆர்தர் பேசும்போது “பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் இந்த நடவடிக்கை முற்றிலும் ரிடிகுலஸான முடிவு. பாகிஸ்தான் டீம் தற்போது இப்படி ஒரு மெஸ்ஸில் இருப்பதற்கு இதுவே மிக முக்கியமான காரணம்” என்று ஆரம்பித்து “அவர்கள் தொடர்ந்து பிளேயர்களையும், கோச்களையும், செலக்ஷன் கமிட்டியையும் மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். அங்கு எந்த ஒரு ஸ்டெபிலிட்டையும் இல்லை. சரியான பிளானிங் மற்றும் ஸ்ட்ரக்சர் இருந்தால் மட்டுமே கன்சிஸ்டன்ட் பெர்ஃபார்மன்ஸ் தர முடியும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts