இந்திய கிரிக்கெட்

நம்ம தமிழ்நாட்டு சாய் சுதர்சனுக்கு செக் வைத்த திலக் வர்மா.. வேற மாதிரி பேட்டிங்.. மாறிய நிலவரம்

தற்போது இந்திய உள்நாட்டு டெஸ்ட் தொடரான துலீப் டிராபியின் செமி பைனல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் வடக்கு மண்டல அணிக்கு எதிராக தென்மண்டல அணியின் கேப்டன் திலக் வர்மா சிறப்பான பேட்டிங் மூலம் சாய் சுதர்சனுக்கு செக் வைத்திருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வடக்கு மண்டல அணி 115 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. பந்து வீச்சில் குர்னூர் பிரார் நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இதைத் தொடர்ந்து விளையாடிய தென் மண்டல அணிக்கு நாராயணன் ஜெகதீசன் 36 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அந்த அணி 80 ரன்னுக்கு 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதைத்தொடர்ந்து கேப்டன் திலக் வர்மா உடன் ஸ்ரேயாஸ் கோபால் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி 100 ரன்கள் தாண்டி பார்ட்னர்ஷிப் அமைத்தது. ஸ்ரேயாஸ் கோபால் 88 எடுத்து ஆட்டம் இழந்தார்.

இன்னொரு முறையில் சிறப்பாக விளையாடிய கேப்டன் திலக் வர்மா சதம் அடித்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 225 பந்தில் 106 ரன்கள் எடுத்திருக்கிறார். தென் மண்டல அணி இரண்டாவது நாள் ஆட்ட நேரம் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்து 90 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

- Advertisement -

இந்திய டெஸ்ட் அணியில் சாய் சுதர்சன் இடத்தை படிக்கல் கைப்பற்றி இருக்கிறார். இன்னொரு பக்கம் இந்திய தேர்வுக்குழு திலக் வர்மாவை எல்லா வடிவங்களிலும் ஆட வைக்க வேண்டும் என விரும்புகிறது. தற்போது அவர் பேட்டிங் செய்ய கடினமான ஆடுகளத்தில் சதம் அடித்திருக்கிறார். எதிர்காலத்தில் சாய் சுதர்சன் நீக்கப்பட்டு திலக் வர்மா டெஸ்ட் அணியில் உள்ளே வரவும் வாய்ப்புகள் உருவாகி உள்ளது.

- Advertisement -
Published by