டி20 உலகக் கோப்பை 2024

என்ன கர்மாவா? நான் வெயிட் பண்றேன்.. பாக் பத்திரிக்கையாளருக்கு மைக்கேல் வாகன் தந்த பதிலடி

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் இருக்கும் நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை என முக்கிய அணிகள் இரண்டாவது சுற்றுக்கு முன்னேற முடியாமல் பரிதாபமாக வெளியேறி இருக்கின்றன. இந்த நிலையில் பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் கிண்டல் செய்ததற்கு இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பதிலடி கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் பெரிய அணியாக பாகிஸ்தான் அணி ஏ பிரிவில் இருந்து அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது. அந்த அணி தான் விளையாடிய முதல் போட்டியில் கிரிக்கெட்டுக்கு மிகவும் புதிதான அமெரிக்க அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

இதேபோல் ஆப்கானிஸ்தான் அணியிடம் 100 ரன்கள் கூட எடுக்க முடியாமல் சுருண்டு தோற்ற நியூசிலாந்து அணி, தொடர்ந்து வெஸ்ட் இண்டிஸ் அணியிடமும் வெல்ல வேண்டிய போட்டியை தோற்று அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது.

ஏ பிரிவில் இருந்து பாகிஸ்தான் அணிக்கு பதிலாக அமெரிக்க அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இதுகுறித்து மைக்கேல் வாகன் பதிவு செய்த பொழுது “அமெரிக்க அணி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றிருக்கிறது. பாகிஸ்தான் அணி வெளியேறிவிட்டது. இந்த நேரத்தில் பாகிஸ்தான் அணி ஒரு சிறந்த வெள்ளை பந்து கிரிக்கெட் அணிக்கு வெகு தூரத்தில் இருக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் நமீபியா அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும் என்கின்ற நிலையில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் நவாஸ் மைக்கேல் வாகனை குறிப்பிட்டு “ஹேய்! மைக்கேல் வாகன் கர்மா உண்மையானது!” பதிவு செய்தார்.

இதையும் படிங்க : பாகிஸ்தான் டீம்ல இந்த குரூப்ப மட்டும் வச்சுக்கோங்க.. இவங்க எல்லாரையும் தூக்கிடுங்க – வாசிம் அக்ரம் பேட்டி

இப்படியான நிலையில் நேற்று 10 ஓவர்கள் கொண்ட போட்டியாக இங்கிலாந்து மற்றும் நமீபியா அணிகள் மோதிய போட்டி நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று, அடுத்து ஸ்காட்லாந்து அணியை ஆஸ்திரேலிய அணி தோற்கடிக்க, இங்கிலாந்து அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. இதைக் குறிப்பிட்டு பாகிஸ்தான் பத்திரிக்கையாளருக்கு பதிவு செய்த மைக்கேல் வாகன் “மார்னிங் நவாஸ்! சூப்பர் 8 சுற்றுக்காகக் காத்திருக்கிறேன். நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

Published by