ரிஷப் பண்ட் வைபவ் சூரிவன்சியை பார்த்து இதை கத்துக்கணும்.. நானா இருந்தா அதைத்தான் செய்வேன் – மைக்கேல் வாகன் பேச்சு

0
5
Vaibhav

தற்போது ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாட வேண்டும் என்றால் வைபவ் சூரியவன்சியிடம் இருந்து ஒரு விஷயத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என மைக்கேல் வாகன் கூறியிருக்கிறார்.

கடந்த ஐபிஎல் சீசன் ரிஷப் பண்டுக்கு மிகவும் மோசமாக இருந்தது. இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் ஓப்பனராக உள்ளே வந்த அவர் சரளமாக விளையாட முடியாமல் தடுமாறினார். அவருடைய பேட்டிங் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே அதிரடியாக இருந்து வருகிறது.

- Advertisement -

முடிந்து போன கதை

தற்போது இந்திய வெள்ளைப்பந்து அணிகளுக்கு விக்கெட் கீப்பர்களாக இடம் பெற கேஎல்.ராகுல், சஞ்சு சாம்சன், இஷான் கிஷான், ஜிதேஷ் சர்மா என நான்கு விக்கெட் கீப்பர்கள் பேட்டிங் தரத்தோடு இருக்கிறார்கள்.

இதன் காரணமாக ரிஷப் பண்ட் இந்திய வெள்ளை பந்து அணிகளுக்கு வர முடியாத நிலை உருவாகி இருக்கிறது. தற்போது ஐபிஎல் தொடரில் அவர் எப்பொழுதும் விளையாட அளவுக்கு சிறப்பாக விளையாடினால் மட்டுமே மீண்டும் வாய்ப்பு கிடைக்கும்.

- Advertisement -

இதைப் பின்பற்ற வேண்டும்

இது குறித்து மைக்கேல் வாகன் பேசும்பொழுது “இந்தியா மிக அதிகமான திறமைகளை கொண்ட ஒரு நாடு. ரிஷப் பண்ட் திறமையை எடுத்துக் கொண்டால் அவருக்கு எந்த நாட்டு அணியிலும் இடம் கிடைக்கும். அவருக்கு நல்ல விக்கெட் கீப்பிங் திறமையும் உண்டு. ஆனால் இந்திய அணிக்கு பார்க்கும் பொழுது பல திறமையான விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள்”

இதையும் படிங்க : ரிஷப் பண்ட் செய்த அது மோசமான விஷயம்.. நடராஜன் அல்வா மாதிரி வேலைய முடிச்சிட்டார் – ஸ்ரீகாந்த் விமர்சனம்

“எனவே தற்போது அவருக்கு ஐபிஎல்தான் மிகப்பெரிய மேடை. தற்போது அவர் நல்ல பேட்டிங் மற்றும் கேப்டன்சியை காட்ட வேண்டும். நான் அவருடைய இடத்தில் இருந்தால் வைபவ் சூரியவன்சியை பார்ப்பேன். ரிஷப் பண்ட் ஆடும் பொழுது எனக்கு அந்தப் பையன் ஞாபகம் வருகிறது. அவர் மூன்றாவது இடத்தில் வந்து சுதந்திரமாக வைபவ் சூரியவன்சி போல விளையாட வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -