தோனி சிஎஸ்கேவுக்கு எங்க ஆண்டர்சனை வாங்குவார்.. அதுக்கு காரணம் வயது கிடையாது இதுதான் – மைக்கேல் வாகன் கணிப்பு

0
910
Vaughan

2024 ஐ பி எல் மெகா ஏலத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சனை சிஎஸ்கே வாங்கினால் தான் ஆச்சரியப்பட மாட்டேன் என மைக்கேல் வாகன் கூறியிருக்கிறார். சிஎஸ்கே ஏன் வாங்குவதற்கான அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்பது குறித்தும் அவர் விளக்கம் அளித்திருக்கிறார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகப்பந்துவீச்சாளர்களில் அதிக விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்த ஜேம்ஸ் ஆண்டர்சன் உள்நாட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடருடன் சமீபத்தில் ஓய்வு பெற்றுக் கொண்டார். அதே சமயத்தில் முதல் முறையாக ஐபிஎல் ஏலத்திற்கு தன்னுடைய பெயரை கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்வதற்கான காரணம்

இதுகுறித்து கூறியிருந்த ஜேம்ஸ் ஆண்டர்சன் “இன்னும் என்னால் விளையாட முடியும் என்று நினைக்கும் ஏதோ ஒன்று எனக்குள் இருக்கிறது. நான் இதுவரை ஐபிஎல் தொடரில் விளையாடியது இல்லை. நான் அதை அனுபவித்ததும் இல்லை.பல காரணங்களுக்காக நான் ஒரு வீரராக இன்னும் நிறைய கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்”

“நான் இங்கிலாந்து கோடை காலத்தில் ஓய்வு பெற்ற பிறகு, தேவையான அளவுக்கு கொஞ்சம் பயிற்சி செய்து வந்திருக்கிறேன். மேலும் இங்கிலாந்து அணிக்கு வழிகாட்டி என்ற முறையில் இணைந்து வேலை செய்தும் வந்திருக்கிறேன்.இதெல்லாம் விளையாட்டு பற்றிய அறிவை இன்னும் வளர்த்துக் கொள்வதற்கு உதவியாகவே அமைந்திருக்கிறது” என்று கூறியிருந்தார்.

- Advertisement -

ஆண்டர்சனை சிஎஸ்கே இதற்காக வாங்கலாம்

இந்த நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் சிஎஸ்கே அணி ஐபிஎல் மெகா ஏலத்தில் வாங்கலாம் என்று கூறிய மைக்கேல் வாகன் பேசும் பொழுது ” நீங்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன் பற்றி பேசுகிறீர்கள். அவரை சிஎஸ்கே அணி நடைபெற இருக்கும் ஐபிஎல் மெகா ஏலத்தில் வாங்கினால் நான் அது குறித்து எந்த ஆச்சரியமும் பட மாட்டேன். ஏனென்றால் அதற்கான காரணங்கள் இருக்கிறது”

இதையும் படிங்க : பாகிஸ்தான் தொடரை ஆஸி விளம்பரப்படுத்தவே இல்ல.. காரணம் இந்திய அணிதான் – கோச் கில்லஸ்பி விமர்சனம்

“சிஎஸ்கே அணி எப்பொழுதுமே முதல் சில ஓவர்களில் பந்தை ஸ்விங் செய்யக்கூடிய வேகப் பந்துவீச்சாளர்களை விரும்பக்கூடிய அணியாக தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது. அது சர்துல் தாக்கூராக இருந்தாலும் தீபக் சகராக இருந்தாலும், யாராக இருந்தாலும் அவர்கள் ஒரு வின் பவுலரை வைத்திருப்பார்கள். எனவே இந்த காரணத்தினால் ஜேம்ஸ் ஆண்டர்சனை சிஎஸ்கே அணி வாங்கினால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -