2022 ஐபிஎலின் சிறந்தக் கேப்டன் இவர் தான் – மைக்கல் வாகன் கருத்து

0
1036
Michael Vaughan

2022 ஐ.பி.எல் பதினைந்தாவது சீசன் 75% லீக் போட்டிகள் முடிவடைந்து, ப்ளே-ஆப்ஸ் சுற்றில் நுழையும் இடத்தில் இருக்கிறது. இதில் முதல் அணியாக ப்ளே-ஆப்ஸ் வாய்ப்பில் இருந்து மும்பை அணி வெளியேறி இருக்கிறது. முதல் அணியாக ப்ளே-ஆப்ஸ்க்குள் குஜராத் அணி நுழைந்திருக்கிறது.

லக்னோ அணி 12 ஆட்டங்களில் 8 ஆட்டங்களில் வென்று 16 புள்ளிகளோடு, புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில், ப்ளே-ஆப்ஸ் சுற்றுக்குள் போக விளிம்பில் நிற்கிறது. ராஜஸ்தான் அணி 11 ஆட்டங்களில் 7 ஆட்டங்களில் வென்று 14 புள்ளிகளோட, புள்ளி பட்டியலில் மூன்றாமிடத்தில் இருக்கிறது. மீதமுள்ள மூன்று போட்டிகளில் ஒரு ஆட்டத்தில் வென்றால் கூட, ப்ளே-ஆப்ஸ் சுற்றுக்குள் நுழைய வாய்ப்பு அமையலாம்.

- Advertisement -

இதில் பெங்களூர் அணி 12 ஆட்டங்களில் 7 ஆட்டங்களை வென்று, 14 புள்ளிகளோடு, புள்ளி பட்டியலில் நான்காமிடத்தில் இருக்கிறது. இப்பொழுது பெங்களூர் அணியின் செயல்பாட்டை பொறுத்தே, டெல்லி, ஹைதராபாத் அணிகளின் ப்ளே-ஆப்ஸ் வாய்ப்பு அமையும் என்ற நிலைக்கு, ஐ.பி.எல் தொடர் வந்திருக்கிறது!

ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனிற்கு பெங்களூர் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து விலக, பிப்ரவரி மாதம் நடந்து முடிந்த மெகா ஏலத்திலிருந்து பாஃப் டூ பிளிசிஸை பெங்களூர் அணி நிர்வாகம் வாங்கியதோடு கேப்டனாகவும் கொண்டு வந்தது. 37 வயதான பாஃப் டூ பிளிசிக்கு ஏழு கோடி கொடுத்து வாங்கியது சிலரது விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்தாலும், அவருக்கு கேப்டன் பொறுப்பு தரப்பட அந்த விமர்சனங்கள் காணாமல் போயின.

இந்தத் தொடரில் தினேஷ் கார்த்திக், சபாஸ் அகமத் ஆகியோரின் திடீர் எழுச்சியால் பெங்களூர் அணி சிறப்பான வெற்றிகளைப் பெற்று, பின்பு தடுமாற ஆரம்பித்து, ஹைதராபாத், குஜராத் அணிகளிடம் மோசமாக தோற்று, பின்பு டெல்லி அணியுடனான போட்டியில் ஜெயித்து திரும்பி வந்திருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில், ஆசஷ் கோப்பை வென்றுள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பாஃப் டூ பிளிசிஸ் பற்றி கூறும் பொழுது, “நான் எப்போதிருந்தே சொல்லி வருகிறேன். பாஃப் டூ பிளிசிஸை அணிக்குள் கொண்டுவந்து கேப்டனாக்கியதால், இந்த முறை பெங்களூர் அணிக்கு சிறப்பான வாய்ப்பு உருவாகியிருக்கிறது. அவர் சிறந்த வீரர் மற்றும் கேப்டன். அவரிடம் மிகச்சிறப்பான சிந்தனைகள் இருக்கிறது. அவர் இதனோடு ஒரு பேட்ஸ்மேனாகவும் வெளிப்படுவதை பார்ப்பது அருமையாக உள்ளது. அவரது அணி நடத்தும் விதத்தை நான் விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்!